Saturday, 17 December 2011

திருவாரூர் ரஜினிராக்ஸ்-இன் தலைவர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் ,,



திருவாரூர் ரஜினிராக்ஸ் கேப்டன் திரு.நிர்மல் குமார் தலைவர் ரசிகர்களுடன் 12  டிசம்பர் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடினார்..

 இந்த நிகழ்ச்சி நேதாஜி சாலை (நடேசன் தியேட்டர் அருகில் ) திருவாரூரில் நடைபெற்றது...



இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியை நிர்மல், செந்தில் பாலாஜி, செழியன், மணி, நாகு, வினோத் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்...


தலைவர் ரசிகர்களால் திணறியது வள்ளுவர் கோட்டம்..



வள்ளுவர் கோட்டம் விழாக் கோலம் பூண்டது ...

ஒரு மாநாடைப் போல விழா பிரமாண்டமாக நடைபெற்றது... 


தலைவரின் ரசிகர்கள் திரளாக தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...


விழாவை ராமதாஸ் , ரவி, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் ..
இந்த நிகழ்வு அணைத்து தலைவர்  ரசிகர் நற்பணி மன்றங்களின் சார்பில் நடைபெற்றது...
 விழாவில் டைரக்டர் S .P . முத்துராமன் , நடிகர்கள் திரு விஜய குமார் , செந்தில்,
ராகவா லாரன்ஸ், கருணாஸ், கலைபுலி தாணு, சின்னி ஜெயந்த், வாசு விக்ரம், வசந்த் விஜய் ,
 சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்... 

சென்னையை திணறடித்த தலைவரின் பிறந்தநாள் விழாக்கள்....

<><><><><><><><>
தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும்  ரசிகர்கள்
 பல சிறப்பான மற்றும் பயனுள்ள பல நிகழ்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்... 

                      

<><><><>
பல நலத்திட்டங்களையும் வழங்கி தலைவரின் ரசிகர்கள் எப்படிபட்டவர்கள்
 என்பதை நீருபிக்கவும் தவறவில்லை.
  


<><><><>
நமது onlysuperstar .com  சார்பில் கரையான் சாவடி பத்மாவதி ஸ்ரீனிவாசா மகாலில்
 நடைபெற்ற  விழாவிற்கு பஞ்ச்தந்த்ரம் புத்தக எழுத்தாளர்கள் திரு.கிட்டி, திரு பாலசுப்ரமணியன்
மற்றும் திரு ஜான் யேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

<><>
<> <>
<><><><>
<>
<><><><>
<><>
திரளான ரசிகர்களும் கலந்து கொண்டு விழாவை மேலும் அழகு படுத்தினர் ...
 இந்த விழாவை சுந்தர் , ரஜினி மனோஜ் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்....

<><><><>
13-Dec-11

Friday, 5 August 2011

பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்

நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு பரபரப்புக்கள் இடையில் ஆத்மார்த்தமான ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வு அனைவரது கவனத்தையம் ஈர்த்து, தமிழ்நாட்டையே பழனி நோக்கி திரும்பி பார்க்க வைத்தது என்றால் மிகையாகாது.
DSC 0196 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெற்று தாயகம் திரும்பியதையடுத்து தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், 02/08/2011 அன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஒரே நேரத்தில் 1008 ரசிகர்கள் முடிகாணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
DSC 0269 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
ஒரே நேரத்தில் ஒரே கோவில் இப்படி 1008 பேர் ஒரு தனி நபருக்காக முடிகாணிக்கை செலுத்தியது சரித்திரத்தில் இது வரை நடைபெறாத ஒன்றாகும். இது தொடர்பான செய்தி – முதன் முதலில் -  சில நாட்களுக்கு முன்பு நமது தளத்தில் இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
DSC 0608 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், அதன் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ், தலைமையில் 1008 ரசிகர்கள் (சரியான எண்ணிக்கையை குறிப்பிடவேண்டும் என்றால் 1056) பழனி சண்முகா நதிக்கரையில் முடிகாணிக்கை செலுத்தினர். அதன் பின்னர் மதியம் நடைபெற்ற சிறப்பு உச்சி பூஜையில் கலந்துகொண்டனர். இரவு தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.
DSC 0387 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
முன்னதாக முடிகாணிக்கை செலுத்திய பின்னர், சண்முகா நதியில் ரசிகர்கள் புனித நீராடினார்கள். பின்னர் 1008 ரசிகர்களும் சீருடை அணிந்து அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டனர். பின்னர் ‘பழனி மலை முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் கிரிவலம் வந்தனர். அதன் பின்னர் மலைமீது குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் சந்நிதிக்கு வந்து பிரார்த்தித்தனர். அதன் பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் பங்கேற்று சுமார் 1500 முருக பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தனர். பின்னர் மாலை 7.00 மணிக்கு தங்கத் தேர் இழுத்தனர்.
DSC 0497 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!மேற்படி நிகழ்ச்சிக்கு பத்திரிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. சன் டி.வி. மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி செய்திகளில் இதை காண்பித்தனர். தினகரன் நாளிதழ் போஸ்டரில் மிகப் பெரிய படத்தை அச்சிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
எந்த வித குழப்பமும் இன்றி ஒரு ராணுவ கட்டுப்பாடுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு பொதுமக்களின் ஏகோபித்த ஆசியை பெற்றுள்ளது. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளில் 1000 த்துக்கும் அதிகமான மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்துவது என்பது லேசுப்பட்ட விஷயம் அல்ல.
நிகழ்வு முழுதும் ஒரு தேர்ந்த ஒழுங்கு தென்பட்டது, பலரை ஆச்சரியப் படவைத்தது. (புகைப்படங்களை பார்த்தால் அது தெளிவாக புரியும்).
தலைவரின் நண்பர் ராஜ்பஹதூர், கோபிநாத்ராவ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சென்னை மாவட்ட தலைவர் என்.ராம்தாஸ், பெங்களூர் வெங்கடேஷ், பெங்களூர் இளவரசன், குப்புராஜ்,  எஸ்.ஐ.சி.ஸ்ரீதர், திருச்சி கர்ணன், கரூர் சந்திரசேகர், கோயம்புத்தூர் கோபி, மதுரை முத்துமணி, நாகை பாஸ்கர், சிவகங்கை ஜே.பி.ரவி, நாகப்பட்டினம் குபேந்திரன், திருச்சி ராயல் ராஜ், ரஞ்சித், ரெங்கராஜ், சாத்தூர் சிவா, ஜெகன், முத்தரசநல்லூர் வேலாயுதம் மற்றும் பூங்காநகர் எழில், தாம்பரம் கேசவன், சைதை ரவி, வளசை ஆனந்தன், கொடுங்கையூர் ஆனந்தன், ரஜினி டில்லி, பெங்களூர் பிரவீன் உள்ளிட்ட மன்றப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடு: பழனி கருணாலய துறை, சரவணன், பழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Fans List book  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
முன்னதாக இந்த நிகழ்வை ஒட்டி, முடிகாணிக்கை செலுத்தும் பகதர்களின் பெயர்கள் அடங்கிய அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் அது வழங்கப்பட்டது.

ரஜினி சார் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும்” – ‘தல’ அஜீத் உருக்கம்!

திரையுலகில், சூப்பர் ஸ்டார் ரஜினி மீது – உண்மையான – மதிப்பும், அன்பும் கொண்டுள்ள நடிகர்களில், ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தும் ஒருவர். இந்த வார ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி சூப்பர் ஸ்டார் மீது அவர் எந்தளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை நன்கு உணர்த்தியது. (பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அளித்த பத்திரிக்கை பேட்டிகளை பற்றி தயவு செய்து யாரும் கூறவேண்டாம். இப்போது என்னவோ அதை பாருங்கள்.)
எந்த வித பின்புலமும் இன்றி அறிமுகமாகி, முழுக்க முழுக்க எதிர்நீச்சல் போட்டு இன்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றி தோல்விகளை எல்லாம் கடந்து தலைவருக்கு பிறகு பெஸ்ட் ஒப்பன்னிங் நட்சத்திரமாக திகழும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் திரையுலகில் ஓர் அதிசயம்.
முதுகெலும்பற்ற நடிகர்கள் மத்தியில் முதுகெலும்புள்ள ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தனது ரசிகர் மன்றப் பிரமுகர்கள் சிலர், இவரது கொள்கைகளுக்கு மாறாக அரசியல் கட்சியினரிடம் தேர்தல் நேரத்தில் விலைபோக, கொதித்துப் போன ஆஜீத், மன்றங்களை எல்லாம் கலைத்தே விட்டார். அப்போதும் இவர் விடுத்த அறிக்கை, ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்தும் நடிகர்கள் சிலர் படித்து என்லார்ஜ் செய்து பிரேம் போட்டு தங்கள் வீட்டு வரவேற்பரையில் மாட்டவேண்டிய ஒன்று.
இவருக்கு எதிராக இவரை ஒழித்துக்கட்ட வீசப்பட்ட அஸ்திரங்கள் மற்றும் பின்னப்பட்ட சூழ்ச்சிகள் எண்ணற்றவை. ஆண்டவனின் ஆசியோடு அவை அனைத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு புஸ்வானமாக்கிக் கொண்டிருக்கிறார் அஜீத். அஜீத்தின் இந்த சக்திக்கு பின்னால் உறுதுணையாக இருப்பவர்கள் அவரது ரசிகர்களே என்றால் மிகையாகாது.
Thala Ajith 640x426  “ரஜினி சார் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும்” – ‘தல’ அஜீத் உருக்கம்!
இடையில் ஏற்பட்ட சிற்சில பிரச்னைகளால் தளர்ந்துபோயிருந்த அஜீத் தலைவரிடம் ஆசிபெற்று அவரது ‘பில்லா’ ரீமேக்கில் நடித்தபிறகு அவரது கேரியர் கிராஃப் சற்று நிமிர்ந்தது. அந்த சமயத்தில் அஜீத்துக்கு பர்சனலாக சில அட்வைஸ்கள் வழங்கிய தலைவர், சுவாமி ராமா எழுதிய ‘Living with Himalayan Masters’ என்னும் நூலை பரிசளித்தார். அந்த நூல், தலைவர் எதிர்பார்த்தது போல அஜீத்தின் எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் அவரது அணுகுமுறை இன்னும் மாறியது. ஒரு பரிபக்குவமான நிலையை அவருள் ஏற்படுத்தியது. (நம் நண்பர் சிங்கப்பூர் சூர்யா, முன்பு சென்னை வந்தபோது, எனக்கு இதே நூலை பரிசளித்திருந்தார். தற்போது தான் அந்நூலை படித்து வருகிறேன். சும்மா சொல்லக்கூடாது, பிரமாதமான நூல்! Sorry Surya for late reading!!).
சென்ற ஆண்டு முதல்வருக்கு நடந்த FEFSI பாராட்டு விழாவில், நடிகர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று முதல்வர் முன்பே அஜீத் போட்டுடைத்து, “ஆனால் நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்த்கொள்வது கட்டாயப்படுத்தப்படுவதால் அல்ல. உங்கள் மேல் உள்ள அன்பினால் தான்” என்று பேசியபோது, சூப்பர் ஸ்டாரே எழுந்துநின்று கைதட்டியது நினைவிருக்கலாம்.
இந்த வார ஆனந்த விகடனில் அஜீத் அளித்திருக்கும் பேட்டியில், தலைவரை பற்றிய கேள்வி-பதில் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்தே அவரது பக்குவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
————————————————————————
விகடன் : “ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?

அஜீத் : “கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் என் அப்பா, அம்மாவுக்கு பிறகு நான் நேரில் பார்த்த கடவுள் ரஜினி சார் தான். அவர் கிட்டே என்ன பேசினேன்னு சொல்றது நாகரீகமா இருக்காது. ரஜினி சார் எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கனும்கிறது தான் என் ஆசை!”
————————————————————————
அஜீத் இப்படி கூறுவதை அவர் ‘ரஜினி படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருகிறார்’ என்று தயவு செய்து யாரும் தவறாக அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். அவர் கூறுவது என்னவென்றால், ஒருவரது முன்னேற்றத்திலும் நலத்திலும் – உண்மையான – சுயநலமற்ற அக்கறையை – பெற்றவர்களிடம் மட்டும் தான் எதிர்பார்க்கமுடியும். அப்படிபப்ட்ட பெற்றோர் ஒருவகையில் நாம் கண்ணால் காணும் தெய்வம் தானே…? தலைவர் அப்படி ஒரு அக்கறையை அஜீத் மீது காட்டி, அவரது முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு அவருக்கு ஒரு தார்மீக பலத்தை  கொடுத்தமையால் அஜீத் நெகிழ்ந்துபோய் உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தை தான், ‘என் அப்பா அம்மாவுக்கு பிறகு நான் பார்க்கும் கடவுள் ரஜினி சார்’ என்பது.
 dsc1678  “ரஜினி சார் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும்” – ‘தல’ அஜீத் உருக்கம்!
அஜீத் கூறும் பதிலை கூர்ந்து படிக்கும்போது தலைவரிடம் அவர் சமீபத்தில் (தாயகம் திரும்பிய பிறகு) பேசியிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘மங்காத்தா’ அபார வெற்றி பெற நம் தளம் சார்பாக அல்டிமேட் ஸ்டாரை வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை அதற்காக வேண்டுகிறேன்.
(அஜீத் நம் தலைவரை பற்றி உயர்வாக சொன்னதால் மட்டுமே அவரை பற்றி நான் இப்படி கூறுகிறேன் என்பது அல்ல. ஆஜீத்தை பற்றி எனக்கு எப்போதும் உயர்வான எண்ணமே இருந்து வந்துள்ளது. அற்ப விளம்பரங்களுக்கு ஆசைப்படும் பில்டப் நடிகர்களுக்கு மத்தியில் உண்மையில் அஜீத் பக்கா ஜென்டில்மேன். அவரது துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!).

Thursday, 16 June 2011

சூப்பர் ஸ்டார் டிஸ்சார்ஜ்; முதல்வருடன் தொலைபேசியல் உரையாடல்; ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புகிறார்!

சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  தலைவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், எனினும் சிங்கப்பூரில் சில காலம் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் அவரது மருமகன் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நல்ல செய்தியை முதலில் தெரிவித்தது அவரே.

தலைவர் இன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
* 2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி இதே நாளில் தான் ‘சிவாஜி’ திரைப்படம் வெளியானது.
* இன்று முழு ‘பௌர்ணமி’ நாள். இதே போன்று ஒரு ‘பௌர்ணமி’ நாளில் தான் இயக்குனர் சிகரம் கே.பி. தனது சீடர் சிவாஜி ராவுக்கு ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரை சூட்டினார்.
ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது வென்ற தனுஷ், விருதை வென்றபோது சூப்பர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவர் குணமடைந்த பின்னர் தான் கொண்டாட்டங்கள் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். தற்போது ரஜினி அவர்கள் குணமடைந்துவிட்டதால், அந்த வெற்றியை இப்போது கொண்டாடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பல நாட்களாக தாம் நலம் பெறவேண்டி இடையறாது பிரார்த்தித்த லட்சோப லட்சம் ரசிகர்களையும் தமிழக மக்களையும் சூப்பர் ஸ்டார் மறக்கவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவரிடமிருந்து விரைவில் ஒரு ஸ்பெஷல் அறிக்கை வரக்கூடும்.
இதற்கிடையே, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் சூப்பர் ஸ்டார் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், தாம் முதலில் டிஸ்சார்ஜ் ஆனா தகவலை அவரிடம் தெரிவிக்க விரும்பியதாகவும், இன்னும் ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்பவிருப்பதாகவும் கூறினாராம்.
இது குறித்து தமிழகர் அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Govt Statement  சூப்பர் ஸ்டார் டிஸ்சார்ஜ்; முதல்வருடன் தொலைபேசியல் உரையாடல்; ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புகிறார்!

தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!

2011 ஜூன் 13 ஆம் தேதி திங்கட்கிழமை ரஜினி ரசிகர் மன்றங்களின் வரலாற்றில் முக்கியமான நாளாகும். தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரு தனி நபருக்காக சர்வ மதங்களை அடக்கிய கூட்டு பிரார்த்தனை ஒரே நேரத்தில் நடைபெற்றது. அதுவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்.
DSC 2815 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
கூட்டு பிரார்த்தனையை ஏற்பாடு செய்த தஞ்சை மாவட்ட தலைமை மன்றம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை ரஜினி மன்றங்களின் சார்பாக ஏற்கனவே ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாலை 4.30 pm மணி முதலே, திலகர் திடலில் ரசிகர்கள் சாரை சாரையாக குவிந்த வண்ணமிருந்தனர். மன்றப் பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஆகையால் பெண்கள் கூட்டமும் இருந்தது. தவிர பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
DSC 2744 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
ரசிகர்கள் பலர் வேன் மற்றும் கார்களில் வந்திருந்தனர். பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் கூடுமானவரை எளிமையாக செய்யப்பட்டிருந்தது.
மும்மதங்களின் சார்பாக பிரார்த்தனை நடைபெற்றபோது அந்தந்த மதத்தினர் தலைவர் குறித்த தங்கள் கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறினர்.
DSC 2811 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
“இது எங்கள் நன்றிக் கடன்” – திரு.லியாகத் அலி
இஸ்லாமிய மதம் சார்பாக பிரார்த்தனைக்கு வந்திருந்த திரு.லியாகத் அலி அவர்கள் கூறும் போது, “1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தினரும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட ஒரு இக்கட்டான நேரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எமக்காக பரிந்து பேசி, எங்கள் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க முற்பட்டது எங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த நன்றிக்காகத்தான் எங்கள் சமுதாயத்தின் சார்பாக இன்று அவருக்காக பிரார்த்தனை செய்ய வந்தேன். அவருக்கு ஒரு குறையும் வராது.” என்று கூறினார்.
DSC 2799 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
“அர்த்தமுள்ள ஆன்மீகத்தை பாமரர்களிடமும் கொண்டு சென்றவர் ரஜினி” – ஹிந்து சமுதாயத்தினர்!
ஹிந்துக்கள் சார்பாக பேசிய வரகூர் வெங்கடேஷ், தஞ்சை ராமமூர்த்தி, கணபதி நகர் வெங்கடேஷ் ஆகியோர் பேசியபோது “தமிழத்தில் விபூதி பட்டையும், ருத்ராக்ஷமும் பிரபலமானதே ரஜினி அவர்களால் தான். அவரை பார்த்து பல இளைஞர்கள் விபூதி தரித்தனர், ருத்ராக்ஷமும் அணிந்தனர். தவிர மிகவும் சிக்கலான சின்முத்திரையை (பாபா முத்திரை)  பாமரர்களும் புரியும் திரைப் படங்களில் காண்பித்தார். இப்படி பல ஆன்மீக விஷயங்களை மக்களிடம் கொண்டு சென்றதில் ரஜினிக்கு பெரும்பங்குண்டு…!” என்று குறிப்பிட்டார்.
கட்டுக்கோப்பாக நடைபெற்ற இந்த பிரார்த்தனை ரசிகர்கள் மத்தியில் தலைவரின் உடல் நலம் குறித்த ஒரு பாசிட்டிவான அலையை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. தஞ்சை நகர் முழுக்க இரண்டு நாட்களாக இதே பேச்சு தான்.
DSC 2832 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
தனிப்பட்ட அலுவல் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில மாவட்ட தலைவர்கள் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றபடி அனைத்து மாவட்ட தலைவர்களும் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். பொதுமக்களும் கலந்துகொண்டு பிரார்தித்தனர்.
மும்மதங்களை குறிக்கும் விதமாக மேடையின் BACKGROUND டிசைன் செய்யப்பட்டிருந்தது பொருத்தமாக இருந்தது.
DSC 2938 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
பிரார்த்தனை முழு நிகழ்வு மற்றும் பங்கேற்றோர் விபரங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களின் சார்பாக தஞ்சை மாவட்ட தலைமை மன்றம் நமக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
டைப் செய்ப்பட்ட அந்த அறிக்கையின் எழுது வடிவம் இதோ உங்களுக்காக…
——————————————————————————————–
அனைத்து ரஜினி மன்ற மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்ற சர்வ மத கூட்டு பிரார்த்தனை!
பிரார்த்தனை சரியாக 7.00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்ட தலைமை மன்றத் தலைவர் ரஜினி கணேசன் தலைமையில், மற்ற மாவட்ட தலைவர்கள் நாகை ரஜினி பாஸ்கர், திருச்சி சாகுல் ஹமீது, கடலூர் பெரியசாமி, விழுப்புரம் இப்ராஹிம், திருவண்ணாமலை சண்முகம், விருதுநகர் முருகன், திருவாரூர் தாயுமானவன், புதுக்கோட்டை குணா, ராமநாதபுரம் பாலனமச்சிவாயம், கரூர் ராஜா, கோவை உலகநாதன், திருப்பூர் சதீஷ், சிவகங்கை ஜெ.பி.ரவி, தேனி சிவா, தருமபுரி செந்தில், உதகை மூர்த்திக்குமார், பெரம்பலூர் சன்முகதேவன், சேலம் பழனிவேல், புதுவை கோபி, மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் தஞ்சை நகர் மன்றத் தலைவர் ஒய்.ஜெயின் வரவேர்புரையிலும் கூட்டு பிரார்த்தனை துவங்கியது.
DSC 2890 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
முதலில் கிறிஸ்தவ முறைப்படி துவங்கியது. இயேசு ஜெபராஜ் தலைமையிலான ஜெபமாலை குழுவினர் முதலில் பிரார்த்தனை செய்தனர். பைபிளில் இருந்து வசனம் படிக்கப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டன.
அதனை தொடர்ந்து 7.20 மணிக்கு லியாகத் அலி அவர்கள் தலைமையில் இஸ்லாம் முறைப்படி து.ஆ. செய்யப்பட்டு பிரார்த்தனை துவங்கியது. திருக்குர்ஆன் வாசிக்கப்பட்டது.
DSC 2777 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
அதற்கு பிறகு சரியாக 7.40 க்கு ஹிந்து முறைப்படி பிரார்த்தனை துவங்கியது. வரகூர் வெங்கடேஷ், தஞ்சை ராமமூர்த்தி, கணபதி நகர் வெங்கடேஷ் ஆகியோர் இப்பிரார்த்தனைக்கு தலைமையேற்றனர்.
அதன் பின்னர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அனைவரும் ஒன்று சேர்ந்து  5 நிமிடம் மௌனமான முறையில் பிரார்த்திக்க பிரார்த்தனை நடைபெற்றது.
தலைவர் ரஜினி எந்த வித இன்னலுமின்றி உடல் நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், வளமுடனும், அவரை சுற்றியுள்ளவர்களும், அவரை வாழவைத்த தமிழக மக்களும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து, இனிதே நிறைவு பெற்றது.
DSC 2751 640x425  தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை! Excl.Pics & News!!
இறுதியில் தஞ்சை மாவட்ட துணை செயலாளர் கே.வெங்கடேஷ் நன்றி கூறினார்.
இக்கூட்டு பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தஞ்சை  மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் அவர்களால் செய்யப்பட்டு மற்றும் நகர துணை தலைவர் தாய்.வெங்கடேஷ், விருது நகர் சக்திவேல் பாண்டியன், தி.நகர் பழனி, மாறி, ஜோதி, குன்றத்தூர் ராஜ், தாம்பரம் ராமமூர்த்தி, நீலகண்டன், குன்றத்தூர் பிரசாத், ரஜினி பாலு, கோவை வேணுகோபால், சோம சக்திவேல், திருச்சி கலீல், திருவாரூர் ஜின்னா, நாகை குபேந்திரன், மயிலாடுதுறை ராஜேஷ், பவுன் முருகானந்தம், மற்றும் தஞ்சை நகர ஒன்றிய கிளை நிர்வாகிகளும் ரசிகர் மன்றத்தாரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.
மற்ற நடிகர்களின் ரசிகர் மன்றத் தலைவர்களும் பங்கேற்பு
இவர்களுடன் விஜயகாந்த் மன்ற தே.மு.தி.க. நகர செயலாளர் எஸ்.எஸ்.அடைக்கலம், கமல் ஹாசன் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் தரும.சரவணன், விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் இரா.விஜய் சரவணன், அஜீத் மன்ற மாவட்ட தலைவர் ஈ.வின்சென்ட், சூரியா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் வாசிம்ராஜா, தனுஷ் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சரவணன், சிம்பு மாவட்ட தலைவர் கந்த முருகன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ரசிகர் மன்றத்தின் சார்பாக விஜய் உள்ளிட்ட பிற நடிகர்களின் மன்றத் தோழர்களும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
இந்த் பிரார்த்தனையில்,  தலைவர் சிங்கபூரிலிருந்து சென்னை திரும்பும்போது, விமான நிலையத்தில் அவருக்கு அனைத்து மாவட்ட தலைமை மன்றங்களின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பொழுது தலைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு, அருகே செல்லாமல், தள்ளி நின்றே பார்த்து வருவோம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் தெரிவித்தார்.