Friday, 5 August 2011

பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்

நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு பரபரப்புக்கள் இடையில் ஆத்மார்த்தமான ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வு அனைவரது கவனத்தையம் ஈர்த்து, தமிழ்நாட்டையே பழனி நோக்கி திரும்பி பார்க்க வைத்தது என்றால் மிகையாகாது.
DSC 0196 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெற்று தாயகம் திரும்பியதையடுத்து தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், 02/08/2011 அன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஒரே நேரத்தில் 1008 ரசிகர்கள் முடிகாணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
DSC 0269 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
ஒரே நேரத்தில் ஒரே கோவில் இப்படி 1008 பேர் ஒரு தனி நபருக்காக முடிகாணிக்கை செலுத்தியது சரித்திரத்தில் இது வரை நடைபெறாத ஒன்றாகும். இது தொடர்பான செய்தி – முதன் முதலில் -  சில நாட்களுக்கு முன்பு நமது தளத்தில் இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
DSC 0608 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், அதன் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ், தலைமையில் 1008 ரசிகர்கள் (சரியான எண்ணிக்கையை குறிப்பிடவேண்டும் என்றால் 1056) பழனி சண்முகா நதிக்கரையில் முடிகாணிக்கை செலுத்தினர். அதன் பின்னர் மதியம் நடைபெற்ற சிறப்பு உச்சி பூஜையில் கலந்துகொண்டனர். இரவு தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.
DSC 0387 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
முன்னதாக முடிகாணிக்கை செலுத்திய பின்னர், சண்முகா நதியில் ரசிகர்கள் புனித நீராடினார்கள். பின்னர் 1008 ரசிகர்களும் சீருடை அணிந்து அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டனர். பின்னர் ‘பழனி மலை முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் கிரிவலம் வந்தனர். அதன் பின்னர் மலைமீது குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் சந்நிதிக்கு வந்து பிரார்த்தித்தனர். அதன் பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் பங்கேற்று சுமார் 1500 முருக பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தனர். பின்னர் மாலை 7.00 மணிக்கு தங்கத் தேர் இழுத்தனர்.
DSC 0497 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!மேற்படி நிகழ்ச்சிக்கு பத்திரிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. சன் டி.வி. மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி செய்திகளில் இதை காண்பித்தனர். தினகரன் நாளிதழ் போஸ்டரில் மிகப் பெரிய படத்தை அச்சிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
எந்த வித குழப்பமும் இன்றி ஒரு ராணுவ கட்டுப்பாடுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு பொதுமக்களின் ஏகோபித்த ஆசியை பெற்றுள்ளது. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளில் 1000 த்துக்கும் அதிகமான மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்துவது என்பது லேசுப்பட்ட விஷயம் அல்ல.
நிகழ்வு முழுதும் ஒரு தேர்ந்த ஒழுங்கு தென்பட்டது, பலரை ஆச்சரியப் படவைத்தது. (புகைப்படங்களை பார்த்தால் அது தெளிவாக புரியும்).
தலைவரின் நண்பர் ராஜ்பஹதூர், கோபிநாத்ராவ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சென்னை மாவட்ட தலைவர் என்.ராம்தாஸ், பெங்களூர் வெங்கடேஷ், பெங்களூர் இளவரசன், குப்புராஜ்,  எஸ்.ஐ.சி.ஸ்ரீதர், திருச்சி கர்ணன், கரூர் சந்திரசேகர், கோயம்புத்தூர் கோபி, மதுரை முத்துமணி, நாகை பாஸ்கர், சிவகங்கை ஜே.பி.ரவி, நாகப்பட்டினம் குபேந்திரன், திருச்சி ராயல் ராஜ், ரஞ்சித், ரெங்கராஜ், சாத்தூர் சிவா, ஜெகன், முத்தரசநல்லூர் வேலாயுதம் மற்றும் பூங்காநகர் எழில், தாம்பரம் கேசவன், சைதை ரவி, வளசை ஆனந்தன், கொடுங்கையூர் ஆனந்தன், ரஜினி டில்லி, பெங்களூர் பிரவீன் உள்ளிட்ட மன்றப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடு: பழனி கருணாலய துறை, சரவணன், பழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Fans List book  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
முன்னதாக இந்த நிகழ்வை ஒட்டி, முடிகாணிக்கை செலுத்தும் பகதர்களின் பெயர்கள் அடங்கிய அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் அது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment