சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தலைவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், எனினும் சிங்கப்பூரில் சில காலம் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் அவரது மருமகன் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நல்ல செய்தியை முதலில் தெரிவித்தது அவரே.
தலைவர் இன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
* 2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி இதே நாளில் தான் ‘சிவாஜி’ திரைப்படம் வெளியானது.
* இன்று முழு ‘பௌர்ணமி’ நாள். இதே போன்று ஒரு ‘பௌர்ணமி’ நாளில் தான் இயக்குனர் சிகரம் கே.பி. தனது சீடர் சிவாஜி ராவுக்கு ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரை சூட்டினார்.
ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது வென்ற தனுஷ், விருதை வென்றபோது சூப்பர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவர் குணமடைந்த பின்னர் தான் கொண்டாட்டங்கள் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். தற்போது ரஜினி அவர்கள் குணமடைந்துவிட்டதால், அந்த வெற்றியை இப்போது கொண்டாடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பல நாட்களாக தாம் நலம் பெறவேண்டி இடையறாது பிரார்த்தித்த லட்சோப லட்சம் ரசிகர்களையும் தமிழக மக்களையும் சூப்பர் ஸ்டார் மறக்கவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவரிடமிருந்து விரைவில் ஒரு ஸ்பெஷல் அறிக்கை வரக்கூடும்.
இதற்கிடையே, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் சூப்பர் ஸ்டார் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், தாம் முதலில் டிஸ்சார்ஜ் ஆனா தகவலை அவரிடம் தெரிவிக்க விரும்பியதாகவும், இன்னும் ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்பவிருப்பதாகவும் கூறினாராம்.
இது குறித்து தமிழகர் அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment