இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகை ஆஷா பரேக், மறைந்த நடிகர் ஷம்மிகபூர் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருதுகளை லதா ரஜினிகாந்த் வழங்கினார். ஷம்மிகபூர் சார்பில் அவரது மகன் ஆதித்யா பெற்றுக் கொண்டார். வி.எஸ்.ராகவனுக்கு 'செவாலியே சிவாஜி' விருதும், பாடகர் ஏ.எல்.ராகவன், நடிகை எம்.என். ராஜம், டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் உள்ளிட்ட பலருக்கு 'பீஷ்மர்' விருதுகளும் வழங்கப்பட்டன.
அவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் " கே.பாலச்சந்தர், ஷம்மி கபூர், ஆஷா போன்றோருக்கு விருது கொடுத்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எனது பெயரில் என் குருநாதர் பாலச்சந்தருக்கு விருது கொடுத்தது எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. என் பெயரில் விருது வழங்கும் அளவுக்கு நான் பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை.
எனவே எனது பெயரில் விருது வழங்கவேண்டாம் என்று லதாவிடம் கூறினேன். அவரோ 'ஆஸ்ரம்' சார்பில்தானே வழங்குகிறோம் என்று கூறிவிட்டார். இனி வரும் ஆண்டுகளில் எனது பெயரில் கொடுக்கப்படும் இந்த விருது கே பாலச்சந்தர் பெயரில் வழங்கப்பட வேண்டும்," என்றார்.
அவ்விழாவில் லதா ரஜினிகாந்தின் பேசும்போது "இந்தியாவின் மிகச் சிறந்த தேசியவாதி என் கணவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். இதைச் சொல்லும்போதே சிலிர்ப்பாக உள்ளது.
நிறைய பேர் என் கணவர் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறார்கள். அரசியலுக்கு வந்துதான் ஒருவர் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. என் கணவர் ஒரு தேசியவாதியாக, தேசப்பற்றாளராக இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தன் சேவைகளைத் தொடர்வார். " என்று கூறினார்.
THANKS TO CINEMA VIKADAN.COM
No comments:
Post a Comment