சினிமா வசூலில் ரஜினி படத்தின் வசூலை குறிப்பிட்ட நடிகரின் படம் மிஞ்சிவிட்டது… அல்...லது ரஜினி படத்துக்கு அருகில் நிற்கிறது என்றெல்லாம் சிலர் புள்ளிவிவரங்களை அவிழ்த்துவிடுவார்கள்.
ஒரு படத்தின் வசூல் சாதனையை நிச்சயம் இன்னொரு படம் முறியடித்தே தீரும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், ரஜினியின் பட வசூலுக்கு முன்னால் மற்ற நடிகர்களின் படங்கள் குறைந்தது பத்து இடங்களாவது தள்ளித்தான் நிற்கும். ரஜினி படங்களின் வசூலை அவரது படங்கள் மட்டுமே முறியடித்துள்ளன. இதனை ரஜினி ரசிகன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் சொல்லவில்லை.
ஒரு விநியோகஸ்தர் இதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். சந்திரமுகி வசூல் ரூ 100 கோடி என்றால், இதற்கு அடுத்த இடத்தில் அதிக வசூல் பெற்றதாகக் கூறப்படும் வேறு நடிகரின் படம் மிஞ்சிப் போனால் ரூ 30 கோடி வசூலித்தாலே பெரிய சாதனைதான். ஆனால் இந்த அளவீட்டை மட்டுமே வைத்துக் கொண்டு சந்திரமுகிக்கு அடுத்து என் படம்தான் என்று ஒரு நடிகர் அல்லது படத்தின் தயாரிப்பாளர் சொல்வது எத்தனை அபத்தமானது!
சிவாஜி தி பாஸ், எந்திரன் பக்கமெல்லாம் இப்போதைக்கு எந்தப் படமும் வரமுடியாது என்பதால் சந்திரமுகியை உதாரணத்துக்கு குறிப்பிடுகிறேன்.
ரஜினி என்ற பெயர் வெறும் சினிமா படங்களோடு நின்றுவிடுவதில்லை. அந்தப் பெயர் ஒரு விற்பனை மந்திரம். ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே வைத்து பஞ்ச் தந்திரம் என்ற பெயரில் புத்தகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரிய அளவு வருவாய் ஈட்டியவர்களுக்குத் தெரியும் இந்தப் பெயருக்குள்ள மகத்துவம்.
No comments:
Post a Comment