அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் .. எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை .. இருந்தாலும் உள்ளத்தில் உள்ளதை உங்களுடன் பகிர்கிறேன்..
சிறுவயதிலிருந்தே நானும் தலைவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்.ஏன் தலைவரின் தீவிர ரசிகனானேன் என்று தெரியவில்லை. " நமது தலைவரின் ரசிகனாக இருப்பதற்கு காரணம் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை"
தலைவரின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனிப்பதிலும் , தலைவரைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் ஆர்வமுள்ளவன். பலவற்றை தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களின் மூலமும் தெரிந்து கொள்வேன் , இதன் மூலம் தெரிந்து கொள்ளும் ஒரு சில செய்திகளைத் தவிர மற்றவை உண்மைத் தன்மையாக இருந்ததில்லை..!!
வேறு வழியின்றி அதைப் படித்து எனது நண்பர் வட்டத்தில் உள்ள பலருக்கும் தெரியப்படுத்துவேன்,இந்த நிலையில் தான் GUPSHUP இன் SMS GROUP பற்றி தெரிய வந்தது. இதைப் பற்றி அணைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு தீவிர சிந்தித்து பலகட்ட யோசனைகளுக்கு பின்னால் நண்பர்களுடன் கலந்தாலோசித்து ரஜினிராக்ஸ் என்ற இந்த எஸ்.எம்.எஸ் குரூப் ஐ தலைவரின் பிறந்த தினமான "டிசம்பர் 12 , 2010 ஆம் வருடம் உருவாக்கினேன்" இந்த ரஜினிராக்ஸ்-ஐ நான் தொடங்க முக்கிய காரணம் தக்ளைவரைப் பற்றிய உண்மையான செய்திகளை நமது தலைவரின் ரசிகர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதற்க்காகத்தான்.
இதை ஏன் நான் எஸ்.எம்.எஸ். குரூப் ஆக தொடங்கினேன் என்றால் அணைத்து துறைகளிலும் உள்ள நமது தலைவரின் ரசிகர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ( விவசாயி முதல் டாக்டர் வரை, பாட்டாளி முதல் பட்டதாரி வரை...
இன்று... ஒன்றரை வருடங்களைக் கடந்து நமது ரஜினிராக்ஸ் இரட்டை சதத்தை பூர்த்தி செயும் நிலையை எட்டி விட்டது...
இன்ற ரஜினிராக்ஸ் மேலும் பல தகவல்களையும் அளிக்கின்றது..
1 . சின்னத்திரையில் தலைவரின் திரைப்படங்களை பற்றி தெரிவிகின்றது.
2 . தலைவர் ரசிகர்களின் பிறந்தநாளை தெரிவிகின்றது.
3 . வாழ்விற்கு தேவையான பொன்மொழிகளை வழங்குகின்றது.
"ரஜினிராக்ஸ் தான் தலைவரின் ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் எஸ்.எம்.எஸ். குரூப் என்பதில் பெருமிதம் கொள்கின்றது"
" உண்மை செய்திகளை உடனுக்குடன் அளிப்பதும் ரஜினிராக்ஸ் தான் "
“நான் இந்த தருணத்தில் www.onlysuperstar.com சுந்தர் அண்ணா, worldsuperstar கார்த்தி மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த ரஜினிராக்ஸ் இன் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்”
இணையவும்..
இதுவரை நம் பயணத்தில் இணையாத நண்பர்கள் இணைய தங்களது மொபைல் போன் இல் JOIN RAJINIROX என்று டைப் செய்து 09219592195 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும். மேலும் தங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்...
என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ்..
No comments:
Post a Comment