மிகக் குறைந்த காலகட்டத்தில்
வறுமை, பசி, பட்டினி, இந்த விளிம்பு......
அதே போல்
பணம், புகழ், அந்தஸ்து இந்த விளிம்பு.....
இரைண்டையுமே பார்த்த எனக்கு என்ன தெரிந்தது என்றால் திருப்தி என்பது பொருட்களில் கிடைக்காது.
அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
இன்ன பொருள் கிடைதால் நான் நிரந்தரமாய்த் திருப்தி அடைந்து விடுவேன் என்பது முட்டாள்தனம். காரணம் அந்தப் பொருள் கிடைத்த சில காலத்துக்குள்ளேயே, அந்தத் திருப்தி மறைந்துவிடும்.
கண்டக்டராய் இருந்தபோது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கார், பங்களா வாங்க வேண்டும் என்ற கனவுகள் கண்டேன்.
அந்த கற்பனையில் ஏற்பட்ட சந்தோஷம்,
அவை நனவான போது கிடைத்தாலும் நிலைக்கவில்லை.
எல்லாமே நிரந்தரமில்லாதவை.
என் கடமைகளை நான் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
அப்பாவுக்கு நல்ல பிள்ளையாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய், நண்பர்களுக்கு நல்ல தோழனாய், நாட்டுக்கு நல்லகுடிமகனாய் ,
யாரையும் துன்புறுத்தாமல் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்.
- சொன்னவர் நமது கடவுள் ரஜினி.
எங்கள் வாழ்க்கையை நாங்கள் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறோம்....
Thanks: rajinifans fb
No comments:
Post a Comment