ஒரு பஸ் கண்டக்டராய் இருந்து......
ஒரு சூப்பர் ஸ்டாராய் மாறி இருக்கிறார் என்றால்....
அவர் கடந்து வந்த தூரத்தையும் அதைக் கடக்க அவர் சந்தித்து இருக்கும் பிரச்சினைகளையும், வலிகளையும், சோதனைகளையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். சினிமா வாய்ப்புக்கள் சொற்பமாய் கையில் ரஜினி கையில் வைத்திருந்த காலத்தில் எல்லாம் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு படுத்திருந்த நேரம் எல்லாம் இருந்திருக்கிறதாம்..
வயிற்றில் பசியோடு அண்ணா சாலையில் நடந்து செல்லும் போதெல்லாம் ரஜினி அங்கே வைக்கப்பட்டிருக்கும் மிகப் பிரபல நடிகர்களின் கட் அவுட்டுகளையும் போஸ்ட்டர்களையும் பார்த்துக் கொண்டே நடப்பாராம். கையில் சிகரெட் நெருப்பு புகைந்து கொண்டிருக்கையில் உள்ளுக்குள் ஒரு நெருப்பு புகைந்து கொண்டே இருக்குமாம்.....இன்று சினிமா என்னும் துறையில் அவர் எட்டியிருக்கும் உயரத்திற்கு பின்னால் இத்தனை வலிகளை கடந்த அபார பலம் இருக்கிறது.
No comments:
Post a Comment