என்னுடைய குருநாதர் பாபாஜிக்கு என்ன பவருனு எனக்கு தெரியும் , அதனால் தான் நான் நம்பிகையா இந்த படம் இப்டி ஓடும்னு சொன்னேன் . அதுக்காக என்னோட கடவுள் ரொம்ப பவர்புல் அப்டின்னு நா உங்களுக்கு சிபாரிசு பண்ணல , உங்களுட...ைய கடவுளும் அவ்ளோ பவர்புல் தான...் , ஜீசஸ் ஆகட்டும், அல்லா ஆகட்டும், விநாயகர் ஆகட்டும் ... எல்லாருமே பவர்புள் தான், எங்கே அவங்க பவர்புள் ஆகுறாங்கநா , நீங்க எந்த அளவுக்கு நம்பிக்கை அவங்க மேல வைக்குறீங்க , அதுல தான் இருக்கு :-) எந்த அளவுக்கு நீங்க அவங்க கிட்ட ஒப்டைகிறீங்க அதுல தான் , நான் ஒப்படைச்ச நம்பிக்கை இருந்துச்சு சக்சஸ் ஆச்சு ஆண்டவன் இருக்கான் , நல்லவங்க வாழ்வாங்க , கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோ தான் ... சோதனை வரும் , நீ சோதனையா சந்திச்சா தான் சாதனையா மாறும்
Saturday, 26 May 2012
பொன்னான வார்த்தைகள் - தலைவரின் சிவாஜி திரைப்பட வெள்ளிவிழா பேச்சு...
என்னுடைய குருநாதர் பாபாஜிக்கு என்ன பவருனு எனக்கு தெரியும் , அதனால் தான் நான் நம்பிகையா இந்த படம் இப்டி ஓடும்னு சொன்னேன் . அதுக்காக என்னோட கடவுள் ரொம்ப பவர்புல் அப்டின்னு நா உங்களுக்கு சிபாரிசு பண்ணல , உங்களுட...ைய கடவுளும் அவ்ளோ பவர்புல் தான...் , ஜீசஸ் ஆகட்டும், அல்லா ஆகட்டும், விநாயகர் ஆகட்டும் ... எல்லாருமே பவர்புள் தான், எங்கே அவங்க பவர்புள் ஆகுறாங்கநா , நீங்க எந்த அளவுக்கு நம்பிக்கை அவங்க மேல வைக்குறீங்க , அதுல தான் இருக்கு :-) எந்த அளவுக்கு நீங்க அவங்க கிட்ட ஒப்டைகிறீங்க அதுல தான் , நான் ஒப்படைச்ச நம்பிக்கை இருந்துச்சு சக்சஸ் ஆச்சு ஆண்டவன் இருக்கான் , நல்லவங்க வாழ்வாங்க , கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோ தான் ... சோதனை வரும் , நீ சோதனையா சந்திச்சா தான் சாதனையா மாறும்
Saturday, 5 May 2012
தலைவர் ரஜினிகாந்த்... சில தகவல்கள்
2007&ல் மகாராஷ்ட்ரா மாநில அரசு ரஜினிக்கு ‘ராஜ்கபூர் விருது’ வழங்கி கௌரவித்தது.
THANKS ; facebook thalaivar group
2007&ல் பிரபல ஆங்கில இதழான ஏஸியா வீக் ரஜினியை ‘தெற்கு ஆசியாவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களில் ஒருவராக’ தேர்ந்தெடுத்தது.
தனது தாய்மொழி மராத்தி என்றாலும் அம்மொழிப்படங்களில் இதுவரை அவர் நடித்ததே இல்லை.
ரஜினி ஒரு சிறந்த தச்சர். மர வேலைப்பாடுகளில் இவர் கில்லாடி.
... பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய பொருட்களை இன்றும் பாதுகாத்து வருகிறார்.
1995&ல் வெளியான ‘முத்து’ படம் மூலமாகத்தான் தமிழ் சினிமா முதன் முறையாக ஜப்பானிற்குள் நுழைந்தது.
2006&ல் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட நம் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் நட்புறவைப் பற்றிப் பேசுகையில் ஜப்பானில் ‘முத்து’படத்தின் வெற்றியைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
உழைப்பின் அகராதி = தலைவர் திரு.ரஜினிகாந்த்
ஒரு பஸ் கண்டக்டராய் இருந்து......
ஒரு சூப்பர் ஸ்டாராய் மாறி இருக்கிறார் என்றால்....
அவர் கடந்து வந்த தூரத்தையும் அதைக் கடக்க அவர் சந்தித்து இருக்கும் பிரச்சினைகளையும், வலிகளையும், சோதனைகளையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். சினிமா வாய்ப்புக்கள் சொற்பமாய் கையில் ரஜினி கையில் வைத்திருந்த காலத்தில் எல்லாம் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு படுத்திருந்த நேரம் எல்லாம் இருந்திருக்கிறதாம்..
வயிற்றில் பசியோடு அண்ணா சாலையில் நடந்து செல்லும் போதெல்லாம் ரஜினி அங்கே வைக்கப்பட்டிருக்கும் மிகப் பிரபல நடிகர்களின் கட் அவுட்டுகளையும் போஸ்ட்டர்களையும் பார்த்துக் கொண்டே நடப்பாராம். கையில் சிகரெட் நெருப்பு புகைந்து கொண்டிருக்கையில் உள்ளுக்குள் ஒரு நெருப்பு புகைந்து கொண்டே இருக்குமாம்.....இன்று சினிமா என்னும் துறையில் அவர் எட்டியிருக்கும் உயரத்திற்கு பின்னால் இத்தனை வலிகளை கடந்த அபார பலம் இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)