Saturday, 21 January 2012

ரஜினி ஒரு தேசியவாதி! : லதா ரஜினிகாந்த்

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் ஆண்டு விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 'ரஜினி' பெயரில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகை ஆஷா பரேக், மறைந்த நடிகர் ஷம்மிகபூர் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருதுகளை லதா ரஜினிகாந்த் வழங்கினார். ஷம்மிகபூர் சார்பில் அவரது மகன் ஆதித்யா பெற்றுக் கொண்டார். வி.எஸ்.ராகவனுக்கு 'செவாலியே சிவாஜி' விருதும், பாடகர் ஏ.எல்.ராகவன், நடிகை எம்.என். ராஜம், டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் உள்ளிட்ட பலருக்கு 'பீஷ்மர்' விருதுகளும் வழங்கப்பட்டன.

அவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் " கே.பாலச்சந்தர், ஷம்மி கபூர், ஆஷா போன்றோருக்கு விருது கொடுத்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எனது பெயரில் என் குருநாதர் பாலச்சந்தருக்கு விருது கொடுத்தது எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. என் பெயரில் விருது வழங்கும் அளவுக்கு நான் பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை.

எனவே எனது பெயரில் விருது வழங்கவேண்டாம் என்று லதாவிடம்  கூறினேன். அவரோ 'ஆஸ்ரம்' சார்பில்தானே வழங்குகிறோம் என்று கூறிவிட்டார். இனி வரும் ஆண்டுகளில் எனது பெயரில் கொடுக்கப்படும் இந்த விருது கே பாலச்சந்தர் பெயரில் வழங்கப்பட வேண்டும்," என்றார்.

அவ்விழாவில் லதா ரஜினிகாந்தின் பேசும்போது  "இந்தியாவின் மிகச் சிறந்த தேசியவாதி என் கணவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். இதைச் சொல்லும்போதே சிலிர்ப்பாக உள்ளது.

நிறைய பேர் என் கணவர் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறார்கள். அரசியலுக்கு வந்துதான் ஒருவர் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. என் கணவர் ஒரு தேசியவாதியாக, தேசப்பற்றாளராக இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தன் சேவைகளைத் தொடர்வார். " என்று கூறினார்.

THANKS TO CINEMA VIKADAN.COM

ஆஹா ரஜினி ! : நடுரோட்டில் ரசிகர்

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்று. இவ்விழாவில் ரஜினி பெயரில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு வந்திருந்த ரஜினி நிகழ்ச்சி முடிந்ததும் கருப்பு கண்ணாடி ஏற்றப்பட்ட ஒரு காரில் அரங்கில் இருந்து வெளியேறினார். உள்ளே இருப்பது  ரஜினிதான் என்பதை அறியாத பலர், அந்த காருக்கு வழிவிடாமல் வழக்கம் போலவே மெல்ல நடை போட்டார்கள். கார் எப்படியோ காமராஜர் அரங்கத்தை விட்டு மெயின் ரோட்டை பிடித்தது.

அம்முனையில் நின்றிருந்த இரண்டு பத்திரிகையாளர்களை கவனித்த ரஜினி, தனது கார் கண்ணாடியை இறக்கி ஒரு புன்னகைத்து விட்டு, கை கூப்பி வணங்கி விட்டு கிளம்பினார். இந்த நேரத்தில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் ரஜினியை கவனித்து விட்டு ரஜினி சென்ற காரை விரட்ட ஆரம்பித்தார்.

ரஜினியின் கார்  சிக்னலில் நின்றது. அவசரத்திலும், ஆர்வத்திலும் தனது பைக்கை அப்படியே நடு ரோட்டில் விட்டு விட்டு ரஜினி இருந்த காரை நோக்கி ஒடினார் இளைஞர்.

கண்ணாடியை இறக்கிய ரஜினி அந்த இளைஞரை பார்த்து, "ஏம்ப்பா.. இப்படியா வண்டியை விட்டு  ஓடி வருவே, தடுக்கி விழுந்தா என்னாகும்? பைக்கை இவ்ளோ வேகமா ஓட்டறது ரொம்ப தப்பு " என்று கூறிவிட்டு கார் கண்ணாடியை ஏற்றி விட்டார்.

அவர் கண்ணாடியை ஏற்றவும் சிக்னல் விழ சரியாக இருந்தது.

ரஜினியின் கார் செல்ல, ரஜினி தன்னிடம் பேசியதற்காக சந்தோஷத்தில் அந்த ரசிகர் சிரித்தபடி தன் வண்டியை எடுத்துக் கொண்டு போனார்.


Thanks to Cinima vikadan

Tuesday, 17 January 2012

இணையுங்கள் நமது ட்விட்டர்- இல் ரஜினிராக்ஸ் உடன்...

நமது ரஜினிராக்ஸ் தற்போது ட்விட்டரிலும் தலைவரை பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க புதிய பக்கத்தை தொடங்கிஉள்ளது ...


தங்களது ஆதரவை நமது ட்விட்டர் பக்கத்திற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்...
நமது பக்கத்தில் இணைவதற்கான லிங்க்www.twitter.com/RAJINIROX

சத்தத்தை தாண்டிய நமது ரஜினிராக்ஸ்...

சத்தத்தை தாண்டிய நமது ரஜினிராக்ஸ்...
 
தலைவர் ரசிகர்களுக்கு எளிதில் தலைவரை பற்றிய செய்திகள் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட  ரஜினிராக்ஸ் என்னும் நமது எஸ்.எம்.எஸ் குரூப் இன்று 100  நபர்களை தாண்டி உள்ளது...
 
 
 

அணைத்து தலைவரின் ரத்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
 
இந்த அளவு இந்த குரூப் வந்ததற்கு காரணமான அணைத்து தலைவர் ரசிகர்களுக்கும், அணைத்து ரஜினிராக்ஸ் கேப்டன்-களுக்கும், பேஸ் புக், ஆர்குட், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களில் நமது குரூப்-ஐ பற்றி தகவல் தந்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகின்றேன்...  
 
 

"கடமையை செய் பலனை எதிர்பார் "

என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ...

தலைவரின் திரைப்பட வசூல் சாதனை பற்றிய ஒரு தொகுப்பு ..


சினிமா வசூலில் ரஜினி படத்தின் வசூலை குறிப்பிட்ட நடிகரின் படம் மிஞ்சிவிட்டது… அல்...லது ரஜினி படத்துக்கு அருகில் நிற்கிறது என்றெல்லாம் சிலர் புள்ளிவிவரங்களை அவிழ்த்துவிடுவார்கள்.
ஒரு படத்தின் வசூல் சாதனையை நிச்சயம் இன்னொரு படம் முறியடித்தே தீரும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், ரஜினியின் பட வசூலுக்கு முன்னால் மற்ற நடிகர்களின் படங்கள் குறைந்தது பத்து இடங்களாவது தள்ளித்தான் நிற்கும். ரஜினி படங்களின் வசூலை அவரது படங்கள் மட்டுமே முறியடித்துள்ளன. இதனை ரஜினி ரசிகன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் சொல்லவில்லை.
ஒரு விநியோகஸ்தர் இதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். சந்திரமுகி வசூல் ரூ 100 கோடி என்றால், இதற்கு அடுத்த இடத்தில் அதிக வசூல் பெற்றதாகக் கூறப்படும் வேறு நடிகரின் படம் மிஞ்சிப் போனால் ரூ 30 கோடி வசூலித்தாலே பெரிய சாதனைதான். ஆனால் இந்த அளவீட்டை மட்டுமே வைத்துக் கொண்டு சந்திரமுகிக்கு அடுத்து என் படம்தான் என்று ஒரு நடிகர் அல்லது படத்தின் தயாரிப்பாளர் சொல்வது எத்தனை அபத்தமானது!
சிவாஜி தி பாஸ், எந்திரன் பக்கமெல்லாம் இப்போதைக்கு எந்தப் படமும் வரமுடியாது என்பதால் சந்திரமுகியை உதாரணத்துக்கு குறிப்பிடுகிறேன்.
ரஜினி என்ற பெயர் வெறும் சினிமா படங்களோடு நின்றுவிடுவதில்லை. அந்தப் பெயர் ஒரு விற்பனை மந்திரம். ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே வைத்து பஞ்ச் தந்திரம் என்ற பெயரில் புத்தகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரிய அளவு வருவாய் ஈட்டியவர்களுக்குத் தெரியும் இந்தப் பெயருக்குள்ள மகத்துவம்.

Saturday, 14 January 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

அணைத்து தலைவர் ரசிகர்களுக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..


இந்த நன் நாளில் உங்கள் வாழ்வில் வளம் செழிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,,,