Tuesday, 11 December 2012

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு 12.12.12 ஒரு சூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான்
 அவருக்கு வயது. அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள். இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12. சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ தினமலர் இணையதள வாசகர்களுக்குத் தருகிறோம்...

1. ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே..."என்பது தான். நடித்த காட்சிகள் 6.

2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அது அறிமுகமான படம் மூன்று முடிச்சு.

3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.

4. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே "ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்த பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.

5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.

6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.

7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.

8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.

10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர் "மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.

11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன் நடித்த கடைசிப் படம் "படையப்பா".

12. முதல் பேண்டசி படம் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.

13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் "பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம் "மூன்று முகம்".

14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் "மாங்குடி மைனர்".

15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம் "தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

16. முதல் சினிமாஸ்கோப் படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம் "கோச்சடையான்".

17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி". பாடல் பாடிய படம் "மன்னன்".



18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார். இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பது அவரது கருத்து.

19. "பாண்டியன்", "அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

21. ரஜினியின் 50வது படம் "ரங்கா". 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்". ரங்கா படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.

22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்". அவர் முதல்வரானாதல் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.

23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. "நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது. "நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது. "காலம் மாறிப்போச்சு" என்ற டைட்டில் "தர்மதுரை" ஆனது.

24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.

25. ரஜினி எடிட் செய்த படம் "படையப்பா". படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2 இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர் சொன்ன கருத்து "ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது" என்பது.

26. அதிக நாள் ஓடிய படம் "சந்திரமுகி". அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "எந்திரன்". குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "அன்புள்ள ரஜினிகாந்த்".

27. "மூன்று முடிச்சு", "மாப்பிள்ளை", "மன்னன்", "படையப்பா" படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.

28. "முள்ளும் மலரும்", "மூன்று முகம்", "முத்து", "படையப்பா", "சந்திரமுகி", "சிவாஜி" படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள்.

29. மீசையில்லாமல் நடித்த முதல் படம் "தில்லு முல்லு", முதல் முழு நீள காமெடி படமும் அதுதான்.

30. ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்றது பைரவியில் புகழ் பெற்றது அண்ணாமலையில்.

31. இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் "6லிருந்து 60 வரை". ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம்.

32. கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து.

33. நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை. "ஆறு புஷ்பங்கள்" படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.



34. ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த படம் "முரட்டுக்காளை", "சந்திரமுகி". எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த படம் "ஸ்ரீராகவேந்திரர்" மற்றும் "பாபா".

35. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். ரஜினின் பல படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாக நடித்த இந்திப் படம் 16.

36. தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்" என்பார். அதுதான் சூப்பர் ஸ்டார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி




Thanks : Dinamalar

12 12 12 எங்களின் அதிசயப் பிறவியே - பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

12 12 12 எங்களின் அதிசயப் பிறவியே - பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 

தலைவரின் பிறந்தநாள்  கொண்டாட்ட விழா புகைப்படங்கள் இதோ... விரைவில் முழு தொகுப்பு... 



YMCA வில் 13-12-12 நடைபெறும் மாபெரும் பிறந்தநாள் விழாவில் சந்திப்போம்...

Photos: Facebook Rajini Fans 

Thursday, 6 December 2012

BLOOD DONATION CAMP @ 09/12/12

We are celebrating our Thalaivar's 63rd Birthday 12.12.12 in a grandly manner, so we conduct some special events and special blood donate camp here at Chennai, Near Chennai Trade Center, Nandambakkam on Sunday 09.12.12. so all thalaivar rasigargale's, if you wish to participate in this event to donate blood as a voluntary, please register your name here along with your phone number to contact you... and we will get in touch with you shortly.... If you really wish, then you can participate in the blood donation camp, Or else just come and attend the function and make this event more colorful....!!! For info - please contact 8056235381 and 9940242490

Thanks : fb Rajinifans club


Sunday, 25 November 2012

ரஜினி பிறந்த நாளில் ரஜினி இசை ஆல்பம் வெளியீடு!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவரை கவுரவிக்கும் வகையில் ரஜினி குறித்த இசை ஆல்பம் வெளியிடப்படுகிறது. நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இந்த இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார். வருகிற 12-12-12 அன்று ரஜினிகாந்த் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ராகவா லாரன்ஸ் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி. எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த குறுந்தகடு வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன். இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும்,  என்றார்


Thursday, 13 September 2012

தலைவரின் மறக்க முடியாத பஞ்ச் டயலாக்


திரையுலகில் “சூப்பர் ஸ்டார்” என்றாலே அனைவரது நினைவிற்கும் வருபவர் “ரஜினிகாந்த்” தான். அவர்கள் தென்னிந்தியாவில் மட்டும் புகழ் பெற்று விளங்கவில்லை. உலகம் முழுவதும் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப் பெற்று, அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வருகிறார். இத்தகைய புகழ் பெற்ற ரஜினிகாந்த், தன் ஸ்டைலால் மட்டும் அனைவரையும் கவரவில்லை, பஞ்ச் டயலாக்குகள் மூலமும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதை, தன் படங்களின் வழியாக உண்மையாக வெளிகாட்டி வருகிறார். இவரது பெயரைக் கேட்டாலே அனைவரின் மனதிலும் ஒரு குதூகலம் பிறக்கும். இத்தகைய சூப்பர் ஸ்டார் ரஜினியின், சிறந்த, இன்றும் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும், மறக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை படித்து பாருங்களேன்…
* ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பாட்ஷா” படத்தில் நிறைய டயலாக்குகள், மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதில் “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற டயலாக், இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.

* அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்குகளான “பேரை கேட்டாலே, சும்மா அதிருதுல்ல…”, “பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்” போன்றவை சிறந்த பஞ்ச் டயலாக்காக உள்ளது.
* ரஜினி அவர்கள் சிவாஜியுடன் நடித்த கடைசி படமான “படையப்பா”-வில் கூட வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் டயலாக்கை சொல்லியுள்ளார். அதுதான் “அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல”.
அதுமட்டுமல்லாமல், இன்னும் சில சூப்பர் மற்றும் சிந்திக்க வைக்கும் உண்மை டயலாக்குகளான…
* “எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடி தான் இதெல்லாம் வரணும்.”
* “நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்.”


* “நம்ம வாழ்க்கை நம்ம கையில தான் இருக்கு.”
* “நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்.”
* “கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது.”
* “வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது.”

* “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது.”
இவை மட்டுமல்ல இன்னும் இருக்கின்றன. மேலும் ரஜினி அவர்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அளவே இல்லை. அந்த அளவு அவர் தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார்

Saturday, 1 September 2012


எவராலும் நெருங்கிட முடியாத "சூப்பர் ஸ்டார்" என்னும் இமாலயப் பட்டம் ...

சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுத்திட முடியுமா?’ – கலைப்புலி தாணுவைக் கேட்ட இயக்குநர்!!

சிவாஜி 3 டி படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, தினமலர் நிருபர் கேட்ட கேள்விதான் கடந்த இரு வாரங்களாக பத்திரிகை – மீடியாவின் கட்டுரைகளுக்கு தலைப்பாக மாறிவிட்டது.


அந்தக் கேள்வி:

ரஜினி சார்… ப்ளாக் அன்ட் ஒயிட் காலத்திலும் நீங்க இருந்தீங்க, கலர் படம் வந்த காலத்தில
ும் நீங்கதான்… அடுத்து 3 டி படங்கள் காலத்திலும் நீங்கதான் இருக்கீங்க. எந்த நடிகருக்கும் இல்லாத பெரிய பாக்கியம் இது. இதை எப்படி உணருகிறீர்கள்! (சக நிருபர்களின் கைத்தட்டல்…)
அதற்கு ரஜினி தந்த பதில்: அது கடவுளின் ஆசீர்வாதம்… நான் அதிர்ஷ்டசாலி.. வேறென்ன சொல்ல…
-அந்த பிரஸ்மீட் கட்டுரைக்கு அந்தக் கேள்வியையே தலைப்பாக நாம் வைத்திருந்தோம்.

இப்போது வட இந்திய மீடியா முழுக்க கட்டுரையே, ‘சினிமாவின் நான்கு வடிவங்களிலும் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.
அதில் துளிகூட மிகைப்படுத்தல் இல்லை. 100 சதவீதம் உண்மைதான்!
அபூர்வராகங்களில் சின்ன வேடத்தில் அறிமுகமானாலும், அதற்கடுத்த படம் மூன்று முடிச்சில் அவர்தான் நாயகன். வில்லத்தனம் கலந்த நாயகன். ஸ்டைலில் வெளுத்து வாங்கியிருப்பார்! அதன் பிறகு, அவர்கள் உள்பட சில படங்களில் நடித்தவர், பைரவியில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்!

அன்றைக்கு அமரர் எம்ஜிஆர் முதல்வர். திரையுலகை விட்டு அப்போது விலகவில்லை. அடுத்தபடம் நடிப்பார் என்று பேசிக் கொண்டிருந்தனர். சிவாஜி மிகப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நேரம். இன்னொரு பக்கம் கமலும் பெரிய நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார்.

Friday, 10 August 2012

சிவாஜி 3D - எப்படி இருக்கும்????


ஜூன் 15 , 2007 அன்று சிவாஜி வெளியான போது இருந்த எதிர்பார்புகளை எழுத்துகளால் சொல்ல முடியவில்லை...! ஒரு திரைப்படம் வெளியானது என்று சொல்வதை விட அன்று தமிழகத்தில் ஒரு திருவிழா என்ற கூற வேண்டும். செய்தி தாள்களில், தொலைகாட்சி செய்திகள் என எது எடுத்தாலும் சிவாஜி சிவாஜி என்ற பெயர் தன ஒலித்தது...! NDTV , Times now, BBC என அனைத்திலும் தலைவர் பெயர் எதிரொலித்தது. அது வரை ஷங்
கர் இயக்கிய அணைத்து படத்துக்கும் ஷங்கரின் படம் என்று இருந்த பெயர் சிவாஜிக்கு இல்லை, காரணத்தை இங்கு சொல்ல தேவையில்லை.

படமும், அணைத்து எதிர்பர்புகளும் சிறப்பாக பூர்த்தி செய்தது, ரசிகர்களை மகிழ வைத்தது. உலகம் முழுவதும் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க செய்தது, இப்படி பட சிறப்பு வாய்ந்த படம் தற்போது மீண்டும் ஒரு முறை மெருகேத்த பட்டு, சில காட்சிகள் வெட்ட (கூட்ட) பட்டு படத்தின் வேகத்தை அதிக படுத்தி 3D இல் கலக்க வருகிறது. தலைவரை 3D இல் பார்க்க ஆவலாக இருக்கிறது.

சிவாஜி படத்தை கண் முன் வைத்து பார்த்தல் சில காட்சிகள் 3D இல் உண்மையாக பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சியம். முதலில் கனல் கண்ணன் உடன் மோதும் guittar fight, Kingkong படத்தை பார்க்கும் போது வரும் car fight, துப்பாக்கி குண்டு தலைவர் நெற்றியில் நிற்கும் காட்சி, தலைவர் bubble gum, coin என சுண்டி விடும் காட்சிகள் 3D இல் எப்படி இருக்கும்...பாடல்கள் எப்படி இருக்கும்.....

சும்மா அதிருதுல....!!!

கலக்குவோம் படம் வெளியாகும் நாள் 
அன்று...

Thanks FB 12-12-12....

Tuesday, 7 August 2012

தலைவர் மதவாதி அல்ல ... தெளிந்த ஆன்மீகவாதி..

பாமரமக்களில் அதிகமானவர்களுக்கு ஆன்மிகம் என்ற சொல்லும் பாபாஜி, ஸ்ரீ ராகவேந்தரா சுவாமிகள் போன்ற ஜோகிகளது பெயர்களும் ரஜினியால்த்தான் பரிச்சியமானது.இன்று ஸ்ரீ ராகவேந்திரருக்கு கோவில்கட்டி வணங்குமளவிற்கு மக்கள் ஸ்ரீ ராகவேந்திரரை பூஜித்தாலும் இன்
றுவரை ரஜினி நேரடியாக ராகவேந்திரரையோ ,பாபாஜியையோ வணங்குமாறு ஒருதடவை கூட ரசிகர்களையோ மக்களையோ நிர்ப்பந்திக்கவில்லை, அதிகபட்சமாக அவர் கூறியது தியானம் செய்யுங்கள் என்று மட்டுமே.ரஜினியை மதவாதி என்று கூறுபவர்களும்,ஆன்மீகவாதிக்கும் மதவாதிக்குமான வேறுபாடு தெரியாதவர்களும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ரஜினி இதுவரை எந்த மதங்களை பற்றியும் தவறாக ஒருவார்த்தைகூட கூறவில்லை,மாறாக "எந்தமதத்தவராக இருந்தாலும் தியானம் செய்யுங்கள், அது உங்கள் உடலையும் மனத்தையும் பலப்படுத்தும்" என்றே ஆரம்பம்முதல் கூறிவருகிறார்.ரஜினி மதவாதி அல்ல அவரொரு தெளிந்த ஆன்மீகவாதி.





Thanks : Anbulla Rajinikanth Fb Group

Saturday, 4 August 2012

தளபதியின் தங்கங்களுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

அணைத்து நமது தலைவரின் ரசிகர்களுக்கும் ரஜினிராக்ஸ்-ன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.. இருக்கவும் முடியாது... நம் வாழ்வில் அவ்வளவு ஒரு சிறப்பான இடத்தை பெற்றிருப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே..


தாய் தந்தையரிடம் சொல்ல முடியாததை கூட நண்பர்களிடம் சொல்லி நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்...


நமது தலைவர் நட்பின் பெருமையை "தளபதி" படத்தின் மூலம் நட்பென்றால் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி அழகாக நமக்கு சொல்லி இருப்பார்...


நண்பர்களை நேசிப்போம் ... நட்பை சுவாசிப்போம்...


நாளெலாம் நண்பர்கள் தினமே... நல்ல நட்புள்ளவர்களுக்கு...

"உள்ள மட்டும் நானே" "உசுரக் கூடத் தாரேன் " "என் நண்பன் கேட்டா வாங்கிக்னு சொல்லுவேன்"

என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ்...




Saturday, 30 June 2012

வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம் - ரஜினி.

மிகக் குறைந்த காலகட்டத்தில்
வறுமை, பசி, பட்டினி, இந்த விளிம்பு......
அதே போல்
பணம், புகழ், அந்தஸ்து இந்த விளிம்பு.....
இரைண்டையுமே பார்த்த எனக்கு என்ன தெரிந்தது என்றால் திருப்தி என்பது பொருட்களில் கிடைக்காது.
அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
இன்ன பொருள் கிடைதால் நான் நிரந்தரமாய்த் திருப்தி அடைந்து விடுவேன் என்பது முட்டாள்தனம். காரணம் அந்தப் பொருள் கிடைத்த சில காலத்துக்குள்ளேயே, அந்தத் திருப்தி மறைந்துவிடும்.

கண்டக்டராய் இருந்தபோது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கார், பங்களா வாங்க வேண்டும் என்ற கனவுகள் கண்டேன்.
அந்த கற்பனையில் ஏற்பட்ட சந்தோஷம்,
அவை நனவான போது கிடைத்தாலும் நிலைக்கவில்லை.
எல்லாமே நிரந்தரமில்லாதவை.

என் கடமைகளை நான் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
அப்பாவுக்கு நல்ல பிள்ளையாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய், நண்பர்களுக்கு நல்ல தோழனாய், நாட்டுக்கு நல்லகுடிமகனாய் ,
யாரையும் துன்புறுத்தாமல் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்.
- சொன்னவர் நமது கடவுள் ரஜினி.



எங்கள் வாழ்க்கையை நாங்கள் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறோம்....

Thanks: rajinifans fb

Friday, 22 June 2012

Why is RAJINI ROX SMS group started..? will share the thoughts in my heart.

Thanks to all the lovely hearts who joined this group. Don't know how to start but still want to share my thoughts.

Right from my childhood i have been one of the fan of thalaivar out of crores of people. Just can't understand how i became such a crazy fan. Also there is no necessity to have a reason to be a fan of thalaivar.


Iam very much interested in knowing every movements about thalaivar. I get many news about thalaivar in newspapers and also from televisions but all are not true!


Since i have no other choice, i read them and tell it to my friends circle. Only in this situation i came to know about GUPSHUP's SMS group. After learning more about this SMS group, i went into a long discussion with my friends and finally started RAJINI ROX SMS group on thalaivar's birthday as on 12 dec 2010. I started this SMS group to convey true news about thalaivar to his fans. I started RAJINI ROX as a SMS group because i want thalaivar fans of all departments to get regular updates about thalaivar (right from a farmer to a doctor).


Now it has been 1 and a half year since i started this group and will reach soon double century.


RAJINI ROX facilitates the following:
1) Gives updates about thalaivar movies in a small  screen.
2) Notifies the birthdays of thalaivar fans who are a member of the SMS group.
3) Conveys quotes which are valuable in our daily life.


Proud to say that RAJINI ROX is the 1st SMS group started for thalaivar fans. RAJINI ROX gives info about thalaivar instantly.


At this situation i wanna thank www.onlysuperstar.com sundar brother, worldsuperstar kaarthi and all those lovely hearts who have been supportive to me.








For Query : Send to rajinirox@yahoo.com & 7845827245


Dear friends who have not joined in our SMS group please take your mobile, <type> JOIN RAJINIROX and send it to 09219592195. Kindly ask all your friends who are thalaivar fans to join this SMS group.


Always in a separate path like RAJINIKANTH.

Thanks : Saisangeetha

ஏன் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ் குரூப் தொடங்கப்பட்டது ??? - உள்ளத்தில் உள்ளதை பகிர்கிறேன்..

அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் .. எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை .. இருந்தாலும் உள்ளத்தில் உள்ளதை உங்களுடன் பகிர்கிறேன்..


சிறுவயதிலிருந்தே நானும் தலைவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்.ஏன் தலைவரின் தீவிர ரசிகனானேன் என்று தெரியவில்லை. " நமது தலைவரின் ரசிகனாக இருப்பதற்கு காரணம் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை"

தலைவரின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனிப்பதிலும் , தலைவரைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் ஆர்வமுள்ளவன். பலவற்றை தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களின் மூலமும் தெரிந்து கொள்வேன் , இதன் மூலம் தெரிந்து கொள்ளும் ஒரு சில செய்திகளைத் தவிர மற்றவை உண்மைத் தன்மையாக இருந்ததில்லை..!!


வேறு வழியின்றி அதைப் படித்து எனது நண்பர் வட்டத்தில் உள்ள பலருக்கும் தெரியப்படுத்துவேன்,இந்த நிலையில் தான் GUPSHUP இன் SMS GROUP  பற்றி தெரிய வந்தது. இதைப் பற்றி அணைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு தீவிர சிந்தித்து பலகட்ட யோசனைகளுக்கு பின்னால் நண்பர்களுடன் கலந்தாலோசித்து ரஜினிராக்ஸ் என்ற இந்த எஸ்.எம்.எஸ் குரூப் ஐ தலைவரின் பிறந்த தினமான "டிசம்பர் 12  , 2010  ஆம் வருடம் உருவாக்கினேன்" இந்த ரஜினிராக்ஸ்-ஐ நான் தொடங்க முக்கிய காரணம் தக்ளைவரைப் பற்றிய உண்மையான செய்திகளை நமது தலைவரின் ரசிகர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதற்க்காகத்தான்.

இதை ஏன் நான் எஸ்.எம்.எஸ். குரூப் ஆக தொடங்கினேன் என்றால் அணைத்து துறைகளிலும் உள்ள நமது தலைவரின் ரசிகர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ( விவசாயி முதல் டாக்டர் வரை, பாட்டாளி முதல் பட்டதாரி வரை...

இன்று... ஒன்றரை வருடங்களைக் கடந்து நமது ரஜினிராக்ஸ் இரட்டை சதத்தை பூர்த்தி செயும் நிலையை எட்டி விட்டது...

இன்ற ரஜினிராக்ஸ் மேலும் பல தகவல்களையும் அளிக்கின்றது..
1 . சின்னத்திரையில் தலைவரின் திரைப்படங்களை பற்றி தெரிவிகின்றது.
2 . தலைவர் ரசிகர்களின் பிறந்தநாளை தெரிவிகின்றது.
3 . வாழ்விற்கு தேவையான பொன்மொழிகளை வழங்குகின்றது.


"ரஜினிராக்ஸ் தான் தலைவரின் ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் எஸ்.எம்.எஸ். குரூப் என்பதில் பெருமிதம் கொள்கின்றது"

" உண்மை செய்திகளை உடனுக்குடன் அளிப்பதும் ரஜினிராக்ஸ் தான் "

“நான் இந்த தருணத்தில் www.onlysuperstar.com சுந்தர் அண்ணா, worldsuperstar கார்த்தி மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த ரஜினிராக்ஸ் இன் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்

இணையவும்..






For Query : Send to rajinirox@yahoo.com & 7845827245

இதுவரை நம் பயணத்தில் இணையாத நண்பர்கள் இணைய தங்களது மொபைல் போன் இல் JOIN RAJINIROX என்று டைப் செய்து 09219592195 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும். மேலும் தங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்...

என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ்..