பாமரமக்களில் அதிகமானவர்களுக்கு ஆன்மிகம் என்ற சொல்லும் பாபாஜி, ஸ்ரீ ராகவேந்தரா சுவாமிகள் போன்ற ஜோகிகளது பெயர்களும் ரஜினியால்த்தான் பரிச்சியமானது.இன்று ஸ்ரீ ராகவேந்திரருக்கு கோவில்கட்டி வணங்குமளவிற்கு மக்கள் ஸ்ரீ ராகவேந்திரரை பூஜித்தாலும் இன்
றுவரை ரஜினி நேரடியாக ராகவேந்திரரையோ ,பாபாஜியையோ வணங்குமாறு ஒருதடவை கூட ரசிகர்களையோ மக்களையோ நிர்ப்பந்திக்கவில்லை, அதிகபட்சமாக அவர் கூறியது தியானம் செய்யுங்கள் என்று மட்டுமே.ரஜினியை மதவாதி என்று கூறுபவர்களும்,ஆன்மீகவாதிக்கும் மதவாதிக்குமான வேறுபாடு தெரியாதவர்களும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ரஜினி இதுவரை எந்த மதங்களை பற்றியும் தவறாக ஒருவார்த்தைகூட கூறவில்லை,மாறாக "எந்தமதத்தவராக இருந்தாலும் தியானம் செய்யுங்கள், அது உங்கள் உடலையும் மனத்தையும் பலப்படுத்தும்" என்றே ஆரம்பம்முதல் கூறிவருகிறார்.ரஜினி மதவாதி அல்ல அவரொரு தெளிந்த ஆன்மீகவாதி.
Thanks : Anbulla Rajinikanth Fb Group
No comments:
Post a Comment