Friday, 5 August 2011

பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்

நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு பரபரப்புக்கள் இடையில் ஆத்மார்த்தமான ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வு அனைவரது கவனத்தையம் ஈர்த்து, தமிழ்நாட்டையே பழனி நோக்கி திரும்பி பார்க்க வைத்தது என்றால் மிகையாகாது.
DSC 0196 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெற்று தாயகம் திரும்பியதையடுத்து தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், 02/08/2011 அன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஒரே நேரத்தில் 1008 ரசிகர்கள் முடிகாணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
DSC 0269 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
ஒரே நேரத்தில் ஒரே கோவில் இப்படி 1008 பேர் ஒரு தனி நபருக்காக முடிகாணிக்கை செலுத்தியது சரித்திரத்தில் இது வரை நடைபெறாத ஒன்றாகும். இது தொடர்பான செய்தி – முதன் முதலில் -  சில நாட்களுக்கு முன்பு நமது தளத்தில் இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
DSC 0608 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், அதன் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ், தலைமையில் 1008 ரசிகர்கள் (சரியான எண்ணிக்கையை குறிப்பிடவேண்டும் என்றால் 1056) பழனி சண்முகா நதிக்கரையில் முடிகாணிக்கை செலுத்தினர். அதன் பின்னர் மதியம் நடைபெற்ற சிறப்பு உச்சி பூஜையில் கலந்துகொண்டனர். இரவு தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.
DSC 0387 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
முன்னதாக முடிகாணிக்கை செலுத்திய பின்னர், சண்முகா நதியில் ரசிகர்கள் புனித நீராடினார்கள். பின்னர் 1008 ரசிகர்களும் சீருடை அணிந்து அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டனர். பின்னர் ‘பழனி மலை முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் கிரிவலம் வந்தனர். அதன் பின்னர் மலைமீது குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் சந்நிதிக்கு வந்து பிரார்த்தித்தனர். அதன் பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் பங்கேற்று சுமார் 1500 முருக பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தனர். பின்னர் மாலை 7.00 மணிக்கு தங்கத் தேர் இழுத்தனர்.
DSC 0497 640x429  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!மேற்படி நிகழ்ச்சிக்கு பத்திரிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. சன் டி.வி. மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி செய்திகளில் இதை காண்பித்தனர். தினகரன் நாளிதழ் போஸ்டரில் மிகப் பெரிய படத்தை அச்சிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
எந்த வித குழப்பமும் இன்றி ஒரு ராணுவ கட்டுப்பாடுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு பொதுமக்களின் ஏகோபித்த ஆசியை பெற்றுள்ளது. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளில் 1000 த்துக்கும் அதிகமான மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்துவது என்பது லேசுப்பட்ட விஷயம் அல்ல.
நிகழ்வு முழுதும் ஒரு தேர்ந்த ஒழுங்கு தென்பட்டது, பலரை ஆச்சரியப் படவைத்தது. (புகைப்படங்களை பார்த்தால் அது தெளிவாக புரியும்).
தலைவரின் நண்பர் ராஜ்பஹதூர், கோபிநாத்ராவ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சென்னை மாவட்ட தலைவர் என்.ராம்தாஸ், பெங்களூர் வெங்கடேஷ், பெங்களூர் இளவரசன், குப்புராஜ்,  எஸ்.ஐ.சி.ஸ்ரீதர், திருச்சி கர்ணன், கரூர் சந்திரசேகர், கோயம்புத்தூர் கோபி, மதுரை முத்துமணி, நாகை பாஸ்கர், சிவகங்கை ஜே.பி.ரவி, நாகப்பட்டினம் குபேந்திரன், திருச்சி ராயல் ராஜ், ரஞ்சித், ரெங்கராஜ், சாத்தூர் சிவா, ஜெகன், முத்தரசநல்லூர் வேலாயுதம் மற்றும் பூங்காநகர் எழில், தாம்பரம் கேசவன், சைதை ரவி, வளசை ஆனந்தன், கொடுங்கையூர் ஆனந்தன், ரஜினி டில்லி, பெங்களூர் பிரவீன் உள்ளிட்ட மன்றப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடு: பழனி கருணாலய துறை, சரவணன், பழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Fans List book  பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி + சிறப்பு புகைப்படங்கள்!!
முன்னதாக இந்த நிகழ்வை ஒட்டி, முடிகாணிக்கை செலுத்தும் பகதர்களின் பெயர்கள் அடங்கிய அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் அது வழங்கப்பட்டது.

ரஜினி சார் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும்” – ‘தல’ அஜீத் உருக்கம்!

திரையுலகில், சூப்பர் ஸ்டார் ரஜினி மீது – உண்மையான – மதிப்பும், அன்பும் கொண்டுள்ள நடிகர்களில், ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தும் ஒருவர். இந்த வார ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி சூப்பர் ஸ்டார் மீது அவர் எந்தளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை நன்கு உணர்த்தியது. (பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அளித்த பத்திரிக்கை பேட்டிகளை பற்றி தயவு செய்து யாரும் கூறவேண்டாம். இப்போது என்னவோ அதை பாருங்கள்.)
எந்த வித பின்புலமும் இன்றி அறிமுகமாகி, முழுக்க முழுக்க எதிர்நீச்சல் போட்டு இன்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றி தோல்விகளை எல்லாம் கடந்து தலைவருக்கு பிறகு பெஸ்ட் ஒப்பன்னிங் நட்சத்திரமாக திகழும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் திரையுலகில் ஓர் அதிசயம்.
முதுகெலும்பற்ற நடிகர்கள் மத்தியில் முதுகெலும்புள்ள ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தனது ரசிகர் மன்றப் பிரமுகர்கள் சிலர், இவரது கொள்கைகளுக்கு மாறாக அரசியல் கட்சியினரிடம் தேர்தல் நேரத்தில் விலைபோக, கொதித்துப் போன ஆஜீத், மன்றங்களை எல்லாம் கலைத்தே விட்டார். அப்போதும் இவர் விடுத்த அறிக்கை, ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்தும் நடிகர்கள் சிலர் படித்து என்லார்ஜ் செய்து பிரேம் போட்டு தங்கள் வீட்டு வரவேற்பரையில் மாட்டவேண்டிய ஒன்று.
இவருக்கு எதிராக இவரை ஒழித்துக்கட்ட வீசப்பட்ட அஸ்திரங்கள் மற்றும் பின்னப்பட்ட சூழ்ச்சிகள் எண்ணற்றவை. ஆண்டவனின் ஆசியோடு அவை அனைத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு புஸ்வானமாக்கிக் கொண்டிருக்கிறார் அஜீத். அஜீத்தின் இந்த சக்திக்கு பின்னால் உறுதுணையாக இருப்பவர்கள் அவரது ரசிகர்களே என்றால் மிகையாகாது.
Thala Ajith 640x426  “ரஜினி சார் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும்” – ‘தல’ அஜீத் உருக்கம்!
இடையில் ஏற்பட்ட சிற்சில பிரச்னைகளால் தளர்ந்துபோயிருந்த அஜீத் தலைவரிடம் ஆசிபெற்று அவரது ‘பில்லா’ ரீமேக்கில் நடித்தபிறகு அவரது கேரியர் கிராஃப் சற்று நிமிர்ந்தது. அந்த சமயத்தில் அஜீத்துக்கு பர்சனலாக சில அட்வைஸ்கள் வழங்கிய தலைவர், சுவாமி ராமா எழுதிய ‘Living with Himalayan Masters’ என்னும் நூலை பரிசளித்தார். அந்த நூல், தலைவர் எதிர்பார்த்தது போல அஜீத்தின் எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் அவரது அணுகுமுறை இன்னும் மாறியது. ஒரு பரிபக்குவமான நிலையை அவருள் ஏற்படுத்தியது. (நம் நண்பர் சிங்கப்பூர் சூர்யா, முன்பு சென்னை வந்தபோது, எனக்கு இதே நூலை பரிசளித்திருந்தார். தற்போது தான் அந்நூலை படித்து வருகிறேன். சும்மா சொல்லக்கூடாது, பிரமாதமான நூல்! Sorry Surya for late reading!!).
சென்ற ஆண்டு முதல்வருக்கு நடந்த FEFSI பாராட்டு விழாவில், நடிகர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று முதல்வர் முன்பே அஜீத் போட்டுடைத்து, “ஆனால் நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்த்கொள்வது கட்டாயப்படுத்தப்படுவதால் அல்ல. உங்கள் மேல் உள்ள அன்பினால் தான்” என்று பேசியபோது, சூப்பர் ஸ்டாரே எழுந்துநின்று கைதட்டியது நினைவிருக்கலாம்.
இந்த வார ஆனந்த விகடனில் அஜீத் அளித்திருக்கும் பேட்டியில், தலைவரை பற்றிய கேள்வி-பதில் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்தே அவரது பக்குவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
————————————————————————
விகடன் : “ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?

அஜீத் : “கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் என் அப்பா, அம்மாவுக்கு பிறகு நான் நேரில் பார்த்த கடவுள் ரஜினி சார் தான். அவர் கிட்டே என்ன பேசினேன்னு சொல்றது நாகரீகமா இருக்காது. ரஜினி சார் எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கனும்கிறது தான் என் ஆசை!”
————————————————————————
அஜீத் இப்படி கூறுவதை அவர் ‘ரஜினி படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருகிறார்’ என்று தயவு செய்து யாரும் தவறாக அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். அவர் கூறுவது என்னவென்றால், ஒருவரது முன்னேற்றத்திலும் நலத்திலும் – உண்மையான – சுயநலமற்ற அக்கறையை – பெற்றவர்களிடம் மட்டும் தான் எதிர்பார்க்கமுடியும். அப்படிபப்ட்ட பெற்றோர் ஒருவகையில் நாம் கண்ணால் காணும் தெய்வம் தானே…? தலைவர் அப்படி ஒரு அக்கறையை அஜீத் மீது காட்டி, அவரது முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு அவருக்கு ஒரு தார்மீக பலத்தை  கொடுத்தமையால் அஜீத் நெகிழ்ந்துபோய் உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தை தான், ‘என் அப்பா அம்மாவுக்கு பிறகு நான் பார்க்கும் கடவுள் ரஜினி சார்’ என்பது.
 dsc1678  “ரஜினி சார் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும்” – ‘தல’ அஜீத் உருக்கம்!
அஜீத் கூறும் பதிலை கூர்ந்து படிக்கும்போது தலைவரிடம் அவர் சமீபத்தில் (தாயகம் திரும்பிய பிறகு) பேசியிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘மங்காத்தா’ அபார வெற்றி பெற நம் தளம் சார்பாக அல்டிமேட் ஸ்டாரை வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை அதற்காக வேண்டுகிறேன்.
(அஜீத் நம் தலைவரை பற்றி உயர்வாக சொன்னதால் மட்டுமே அவரை பற்றி நான் இப்படி கூறுகிறேன் என்பது அல்ல. ஆஜீத்தை பற்றி எனக்கு எப்போதும் உயர்வான எண்ணமே இருந்து வந்துள்ளது. அற்ப விளம்பரங்களுக்கு ஆசைப்படும் பில்டப் நடிகர்களுக்கு மத்தியில் உண்மையில் அஜீத் பக்கா ஜென்டில்மேன். அவரது துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!).