Friday, 10 August 2012

சிவாஜி 3D - எப்படி இருக்கும்????


ஜூன் 15 , 2007 அன்று சிவாஜி வெளியான போது இருந்த எதிர்பார்புகளை எழுத்துகளால் சொல்ல முடியவில்லை...! ஒரு திரைப்படம் வெளியானது என்று சொல்வதை விட அன்று தமிழகத்தில் ஒரு திருவிழா என்ற கூற வேண்டும். செய்தி தாள்களில், தொலைகாட்சி செய்திகள் என எது எடுத்தாலும் சிவாஜி சிவாஜி என்ற பெயர் தன ஒலித்தது...! NDTV , Times now, BBC என அனைத்திலும் தலைவர் பெயர் எதிரொலித்தது. அது வரை ஷங்
கர் இயக்கிய அணைத்து படத்துக்கும் ஷங்கரின் படம் என்று இருந்த பெயர் சிவாஜிக்கு இல்லை, காரணத்தை இங்கு சொல்ல தேவையில்லை.

படமும், அணைத்து எதிர்பர்புகளும் சிறப்பாக பூர்த்தி செய்தது, ரசிகர்களை மகிழ வைத்தது. உலகம் முழுவதும் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க செய்தது, இப்படி பட சிறப்பு வாய்ந்த படம் தற்போது மீண்டும் ஒரு முறை மெருகேத்த பட்டு, சில காட்சிகள் வெட்ட (கூட்ட) பட்டு படத்தின் வேகத்தை அதிக படுத்தி 3D இல் கலக்க வருகிறது. தலைவரை 3D இல் பார்க்க ஆவலாக இருக்கிறது.

சிவாஜி படத்தை கண் முன் வைத்து பார்த்தல் சில காட்சிகள் 3D இல் உண்மையாக பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சியம். முதலில் கனல் கண்ணன் உடன் மோதும் guittar fight, Kingkong படத்தை பார்க்கும் போது வரும் car fight, துப்பாக்கி குண்டு தலைவர் நெற்றியில் நிற்கும் காட்சி, தலைவர் bubble gum, coin என சுண்டி விடும் காட்சிகள் 3D இல் எப்படி இருக்கும்...பாடல்கள் எப்படி இருக்கும்.....

சும்மா அதிருதுல....!!!

கலக்குவோம் படம் வெளியாகும் நாள் 
அன்று...

Thanks FB 12-12-12....

Tuesday, 7 August 2012

தலைவர் மதவாதி அல்ல ... தெளிந்த ஆன்மீகவாதி..

பாமரமக்களில் அதிகமானவர்களுக்கு ஆன்மிகம் என்ற சொல்லும் பாபாஜி, ஸ்ரீ ராகவேந்தரா சுவாமிகள் போன்ற ஜோகிகளது பெயர்களும் ரஜினியால்த்தான் பரிச்சியமானது.இன்று ஸ்ரீ ராகவேந்திரருக்கு கோவில்கட்டி வணங்குமளவிற்கு மக்கள் ஸ்ரீ ராகவேந்திரரை பூஜித்தாலும் இன்
றுவரை ரஜினி நேரடியாக ராகவேந்திரரையோ ,பாபாஜியையோ வணங்குமாறு ஒருதடவை கூட ரசிகர்களையோ மக்களையோ நிர்ப்பந்திக்கவில்லை, அதிகபட்சமாக அவர் கூறியது தியானம் செய்யுங்கள் என்று மட்டுமே.ரஜினியை மதவாதி என்று கூறுபவர்களும்,ஆன்மீகவாதிக்கும் மதவாதிக்குமான வேறுபாடு தெரியாதவர்களும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ரஜினி இதுவரை எந்த மதங்களை பற்றியும் தவறாக ஒருவார்த்தைகூட கூறவில்லை,மாறாக "எந்தமதத்தவராக இருந்தாலும் தியானம் செய்யுங்கள், அது உங்கள் உடலையும் மனத்தையும் பலப்படுத்தும்" என்றே ஆரம்பம்முதல் கூறிவருகிறார்.ரஜினி மதவாதி அல்ல அவரொரு தெளிந்த ஆன்மீகவாதி.





Thanks : Anbulla Rajinikanth Fb Group

Saturday, 4 August 2012

தளபதியின் தங்கங்களுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

அணைத்து நமது தலைவரின் ரசிகர்களுக்கும் ரஜினிராக்ஸ்-ன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.. இருக்கவும் முடியாது... நம் வாழ்வில் அவ்வளவு ஒரு சிறப்பான இடத்தை பெற்றிருப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே..


தாய் தந்தையரிடம் சொல்ல முடியாததை கூட நண்பர்களிடம் சொல்லி நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்...


நமது தலைவர் நட்பின் பெருமையை "தளபதி" படத்தின் மூலம் நட்பென்றால் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி அழகாக நமக்கு சொல்லி இருப்பார்...


நண்பர்களை நேசிப்போம் ... நட்பை சுவாசிப்போம்...


நாளெலாம் நண்பர்கள் தினமே... நல்ல நட்புள்ளவர்களுக்கு...

"உள்ள மட்டும் நானே" "உசுரக் கூடத் தாரேன் " "என் நண்பன் கேட்டா வாங்கிக்னு சொல்லுவேன்"

என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ்...