Friday, 27 April 2012

தலைவரின் அரசியல் குறித்து ஒரு கற்பனை..

முதல்வன் ஹிந்தி பதிப்பில் அணில் கபூர் இன் பெயர் ” சிவாஜி ராவ்”
ஷங்கர் தமிழ் இல் நிறைவேறாத ஆசையாய் ஹிந்தி யில் நிறை வேற்றி விட்டார் .
ரஜினி “திரையில்” செய்யாத முதல்வர் வேடத்தை “விரைவில்” செய்வார் .
நிகழும் சூழ்நிலை கேற்ப சிவாஜி யில் இருந்து ஒரு ரீமிக்ஸ்


கனல் கண்ணன் : நீ தான் ரஜினி யா ?
ரஜினி : ஆமாம் ..
க க : அப்ப நீ ??
விவேக் : கஜினி …
க க : ஊஊ …நீ ஏதோ கட்சி ஆரமிக்க போறியாமே !!! அது சில பேருக்கு பிடிக்கல ..
அத விட்டுட்டு ஒரு ஷங்கர் படம் ..ஒரு கௌதம் படம் …ஒரு அனிமேஷன் படம் நு நடிக்கலாம் ல.
ரஜினி : அத சொல்ல நீ யாரு..
க க : நான் யாரா? நான் ஓட்ட பிரிகரதுல வி.காந்த் ..வூட்டுக்கு குடுகரதுல கருணாநிதி ..ஆட்டைய போடறதுல ஜெ ..மொத்ததுல உனக்கு ஆப்பு வெக்க வந்த விஜய்..
ரஜினி : கண்ணா…
விவேக் : ரஜினி …பஞ்ச் ஏதாவது சொல்ல போறியா பா?
ரஜினி : ஏன்?
விவேக் : தமிழ் நாட்ல அஆலாளுக்கு வாக்குறுதி தராங்க…வெடல வெங்காயமெல்லாம் கட்சி ஆரமிக்க போறேன்னு சொல்றாங்க…வேணாம் பா..
ரஜினி : அப்ப நீ பேசு …
விவேக் : 2 ம் 3 ம் சிக்ஸ் டா 236 ம் பிக்ஸ் டா.
அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவ தான் சி எம் எலெக்சன் ..அண்ணன் வந்து நின்னாலே 100 வருசத்துக்கு அவர்தாண்ட செலக்சன் சி எம் ..இது எப்டி இருக்கு
ரஜினி :இனிமேதான் இருக்கு …ஊஊ .. நான் கட்சி ஆரமிக்கரத யாராலையும் தடுத்து நிறுத்த முடியாதுன்னு அந்த சில பேர்கிட்ட போய் சொல்லு …


THANKS TO : RAJINI MANOJ

Tuesday, 24 April 2012

KOCHADAIYAAN - T-SHIRTS FOR KOCHADAIYAAN CELEBRATIONS.,,

RAJINIROX and WORLDSUPERSTAR sms groups planned to celebrate Our Thalaivar's KOCHADAIYAAN as a very big Event. In that We planned to make a Kochadaiyaan T-Shirts and distribute to all. All Thalaivar bloods are wearing this T-Shirts in FIRST DAY FIRST SHOW FOR OUR KOCHADAIYAAN.. If you want this T-Shirts means ,Pls send your Name, T-Shirt size, Native To 7845827245 ( RAJINIROX ) & 9715208206 (WORLDSUPERSTAR) or rajinirox@yahoo.com . (AMOUNT WILL BE FINALISHED AND INFORMED YOU). THANKS ALL.. JOIN RAJINIROX TO 09219592195 & JOIN WORLDSUPERSTAR TO 09219592195.

கோச்சடையான் டீ-ஷர்ட் உடன் - கோச்சடையானை சிறப்பாக கொண்டாட ரஜினிராக்ஸ் & வேர்ல்ட்சூப்பர்ஸ்டார் எஸ்.எம்.எஸ் குரூப் ஏற்பாடு...


தலைவரின் கோச்சடையான் திரைப்படம் "3 D " தொழில் நுட்பத்துடன் மிக வேகமாக தயாராகி வருகிறது .. இதை கொண்டாடும் விதமாக நமது ரஜினிராக்ஸ் மற்றும் வேர்ல்ட்சூப்பர்ஸ்டார் எஸ்.எம்.எஸ். குரூப், தலைவரின் படத்துடன் கோச்சடையான் டீ-ஷர்ட் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.. நீங்கள் இந்த டீ-ஷர்ட் ஐ அணிந்து கொண்டு தலைவரின் கோச்சடையானை கொண்டாடலாம்.. இந்த டீ-ஷர்ட் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் உங்களது முழு விபரங்களையும் ( பெயர், டீ-ஷர்ட் அளவு, முகவரி) ஐ 7845827245  அல்லது 9715208206  என்ற எண்ணுக்கும் அல்லது rajinirox@yahoo.com என்ற இணையதள முகவரிக்கோ அனுப்பவும். ( டீ-ஷர்ட்-ற்கான தொகை இறுதியில் தெரிவிக்கப் படும்) தொகை அதிகபட்சமாக 250  ரூபாய் வரை இருக்கும். நன்றி... என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ்...

Monday, 23 April 2012

கோச்சடையான் ராணா வின் முன்னோட்டமே..! - கே.எஸ்.ரவிக்குமார் அதிரடி..

கோச்சடையான்’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
முன்னதாக சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ‘ராணா’ மீண்டும் துவக்கப்படுமா என்பது குறித்தும் ரசிகர்கள் தேர்ந்துகொள்ள ஆவலாக இருக்கின்றனர்.
DSC 7756  ‘ராணா’வின் முன்னோட்டம் தான் ‘கோச்சடையான்’ — கே.எஸ்.ரவிக்குமார் தகவல்!
இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒரு ஆங்கில வெப்சைட் சார்பாக கேட்டபோது அவர் கூறியதாவது : ‘கோச்சடையான்’ அதி வேகமாக வளர்ந்து வருகிறது. சௌந்தர்யா படத்தை திறம்பட கையாண்டு வருகிறார். சொல்லப்போனால் இது ராணாவுக்கு ஒரு வகையில் முன்னோட்டம் மாதிரி. ரஜினிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதையடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ள ராணாவுக்கு இது ஒரு வகையில் முன்னோட்டம் போன்று எடுத்துக்கொள்ளலாம். ராணா நிச்சயம் கைவிடப்படவில்லை. அது நிச்சயம் துவங்கும்!” என்று கூறுகிறார்.
கோச்சடையான் ஒரு வகையில் ராணாவுக்கு முன்னோட்டம் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறுவதில் அர்த்தம் உள்ளது. உடல்நலம் சரியாகி பின்பு சூப்பர் ஸ்டார் நடிக்கும்போது அவர் தன் உடலை அதிகம் ஸ்ட்ரெயின் செய்யக்கூடாது. அவரது உடல் ஆக்க்ஷன் காட்சிகள் மற்றும் காமிராவின் லைட்டிங்கிற்கு சிறிது சிறிதாக பழக்கப்படவேண்டும். அதற்கு ஏற்ற படம் தான் ‘கோச்சடையான்’. எனவே இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் அதிக ஸ்ட்ரெயின் எடுத்துக்கொள்ளாமல் மிதமாக நடித்திருக்கிறார். ஒரு வகையில் இது ராணாவுக்கு பைலட் வண்டி போல.
‘கோச்சடையான்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று, இறுதிகட்டத்தை எட்டிவிட்டதையடுத்து தாம் அடுத்து நடிக்க வேண்டிய படம் குறித்து சூப்பர் ஸ்டார் விரைவில் முடிவு செய்வார் என்று நம்பலாம்.

நன்றி http://www.onlysuperstar.com/ Sundar Sir..