கோச்சடையான் படத்துக்காக லண்டன் சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியை, ஒரு வார கால தீவிர முயற்சிக்குப் பின் சந்தித்து மகிழ்ந்தனர் ரசிகர்கள் இருவர்.ரஜினி லண்டனுக்கு வருகிறார் என்பதை அறிந்ததுமே, லண்டனில் வசிக்கும் பல தமிழ் ரசிகர்கள் தெரிந்து கொள்ள விரும்பியது, அவர் தங்கும் ஹோட்டல் மற்றும் படப்பிடிப்பு நட...த்தப்போகும் ஸ்டுடியோ.இதில் அவர் படப்பிடிப்பு நடத்தப் போகும் ஸ்டுடியோ குறித்து கோச்சடையான் குழுவே தகவல் வெளியிட்டுவிட்டது.சில ரசிகர்கள் ஹோட்டலையும் கண்டுபிடித்து, அவரைப் பார்க்க முயற்சித்துள்ளனர்.அப்படி முயற்சித்தவர்களில் இருவருக்கு ரஜினியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டிவிட்டது.ரஜினியுடனான சந்திப்பு குறித்து சதீஷ் துரைசாமி மற்றும் கார்த்திக் ராகவன் கூறுகையில், ” ரஜினி சார் லண்டன் வந்த 17ம் தேதி முதல் அவரை பார்க்க ஆவலாய் இருந்தோம். இதற்காக லண்டன் ஏர்போட்டில் காத்திருந்தோம். ஆனால் முடியவில்லை.அதன்பிறகு அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்பி, தினமும் அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலுக்கு செல்வோம். அங்கும் முடியவில்லை. கடைசியாக நேற்று ஞாயிற்றுக்கிழமைதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நினைவு பரிசாக விவேகானந்தர் படம் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகத்தை பரிசளித்தோம்.
பின்னர் அவரிடம் பேசுகையில், சார் உங்களை பார்க்க ஒரு வார காலமாக முயற்சி பண்ணினோம். இப்போதுதான் முடிந்தது என்றோம். அதற்கு அவர் ‘அச்சச்சோ… ஏம்பா இப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்க,’ என்றார். பின்னர் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம். அவரும் சம்மதித்தார். போட்டோவும் எடுத்தோம்.என் வாழ்வில் அவரைப் போன்று ஒரு உன்னதமான மனிதரைப் பார்த்ததில்லை. அவருடன் ஒரு தடவையாவது போட்டோ எடுக்க வேண்டும் என்று என்னுடைய 35 வருஷ கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. இதை அவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ‘நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்’, என்றனர் பரவசத்துடன்!