Friday, 22 March 2013

ரஜினி ரசிகர்களின் வேண்டுகோள்... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் ..






அனைத்து ரஜினி ரசிகர்களுக்கு, தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்திருந்தால் 1996 வருடமே வந்திருப்பார். ஆனால் இன்று வரை அரசியலுக்கு வராமல் மவுனம் சாதித்து வருகிறார். பதவியை விரும்பாத பண்பாளனாக தலைவர் இருப்பது நமக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் கூட, அவரை போல் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட சுயநலமில்லா ஒரு மனிதனை இந்த தமிழகத்தில் பார்ப்பது மிகவும் அரிது. இப்படிபட்ட ஒரு தலைவனை, மக்கள் சக்தி கொண்ட மாவீரனை, அரசியல் கட்சிகளும், கட்சி தலைவர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தேர்தல் நேரத்தில் மட்டும் தலைவருன் நட்பு பராட்டுவதும், தேர்தல் முடிந்தவுடன் விட்டு விலகுவதும் நாம் அனைவரும் இதுவரை கண்டு வந்த மறைக்க முடியாத உண்மையாகும். இனியும் இந்த நிலை நம் தமிழகத்தில் தொடர கூடாது. உழைப்பவனே ஊதியம் பெற வேண்டும், மக்கள் மனதில் நிலைத்தவனே தமிழகத்தை ஆள வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு வங்கியாக நம் தலைவரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் பின்னால் நாம் செல்லாமல், நம் தலைவரின் பின்னால் அந்த அரசியல் கட்சிகள் அணிவகுத்து நிற்கும்படி நம் பலம் என்னவென்பதை நம் தலைவருக்கு தெரிய வைக்க வேண்டும். நம் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இதுவரை இருந்தோம், அதற்கு நமக்கு கிடைத்த பலன் தலைவரின் அமைதி மட்டுமே. அவரின் மவுனம் மட்டுமே. இனியும் அமைதியாக இருந்தால் ஒரு நல்ல மனிதனை, மக்கள் சக்தி கொண்ட எளியவனை இந்த தமிழகம் பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது என்ற இன்றைய நிகழ்வுகளின் கருப்பு பக்கத்தை நாளைய சந்ததிகள் வேதனையோடு சொல்லி கொள்ளும் ஒரு இழிநிலை உருவாகும். அதற்க்கு இடமளிக்காது, நம் தலைவரை அரசியலுக்கு வரவைக்க நாம் இனி ஏதாவதொன்று செய்தாக வேண்டும். அது புரட்சியானாலும் சரி, அகிம்சையானாலும் சரி. நம் தலைவரை அரசியலுக்கு வர வைக்க வேண்டும், இது தான் நமது அடுத்த செயல்பாடாக இருக்க வேண்டும்.