Wednesday, 11 December 2013

ஹாப்பி பர்த்டே தலைவா ...







ரஜினி கொடுத்த இரண்டு லட்சம்



ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ‘படையப்பா’ படத்துக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த படம். எதிர்பார்ப்புக்குப் கேட்க வேண்டுமா?

பல பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்போது ‘குமுதம்’ இதழில் பொறுப்பாசிரியராய் இருந்தேன். குமுதம் சினிமாப் பகுதியின் இன்சார்ஜும் அப்போது நான்தான். குமுதம் சினிமா என்று தனியாக ஒரு இதழ் வெளியிடத் திட்டம் இருந்ததால், ஏழு சினிமா நிருபர்கள். ‘பாபா’ படம் பற்றிய பிரத்யேகத் தகவல்களை அள்ளி அள்ளி கொடுத்தோம்.

நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை எங்கள் நிருபர் ஒருவர் பாபா படத்தில் தொடர்புடைய ஒருவரிடம் ‘ஏதாவது லேட்டஸ்ட் டெவலப்மெண்ட் உண்டா?’ என்று கேட்பதற்காக போன் செய்தபோது, எதிர்முனைக்காரர் அவசரமாக போனை கட் செய்தார். சிறிதுநேரத்தில் அவரே லைனில் வந்தார்.

‘சாரோடு டிஸ்கஷனில் இருந்ததேன். அதான் பேச முடியலை…’ என்றவர், சில தகவல்களைக் கூறினார். அது, பாபா படத்தின் முதல் சண்டைக் காட்சி. அதில் ரஜினி வில்லன்களை நோக்கி நடந்து வருவது போன்று சாதாரணமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த டைரக்டர் ஷங்கர், ரஜினி சாரின் ஷூவிலிருந்து தீப்பொறி பறப்பதுபோல் கிராஃபிக்ஸ் செய்யலாம் என்று ஐடியா கொடுத்திருப்பதாகத் தகவல் கூறினார் அவர். இதுபோல் படத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் அவ்வப்போது லைவாக வந்து கொண்டே இருந்தன. நாங்களும் தொடர்ந்து வெளியிட்டோம். அப்போது ரஜினி நடந்தாலும் செய்தி ; உட்கார்ந்தாலும் செய்தி!

ரஜினிக்கு ‘பாபா சினிமா…. சினிமா…’ பாடல் காட்சியில் தோள்பட்டை நழுவிவிட்டது. ரஜினியை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷ் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு அவரும் விஷ் செய்வதால் அவருக்குக் கை வலிப்பதே காரணம் என்று சின்ன சின்ன தகவல்களைக் கூட, பாபா பக்கங்கள் என்று அதற்கென்று தனியாக பக்கங்களையே ஒதுக்கி வெளியிட்டோம். படத்தைப் பற்றி எந்தத் தகவல் கிடைத்தாலும் அதனை மிஸ் செய்யவே இல்லை.

குமுதம் ஒருபக்கம் என்றால், விகடனும் அசரவில்லை. தன் பங்குக்கு அவர்களும் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். குமுதமும் விகடனும் போட்டி போட்டுக் கொண்டு தகவல்களை வெளியிட்டன. விகடன் பெங்களூருக்கே நிருபர்களை அனுப்பி ரஜினி, மனிஷா கொய்ராலா பைக் சவாரியைப் படம் எடுத்து ஸ்பெஷல் ஸ்டோரியே பண்ணியது. பாபா படம் சரிவரப் போகவில்லை. அதற்குக் காரணம், படத்தின் நம்பகத் தன்மையில்லாத கதைதான் என்றாலும் மீடியாக்கள் கொடுத்த ஓவர் பில்டப்பும் இதற்கு மிக முக்கியமான காரணம்.

‘பாபா’ படம் பூஜை போடப்பட்டபோது, ‘குமுதம் ரிப்போர்ட்டரில்’ பாபா பஞ்ச்’ என்கிற போட்டி வைத்தோம். அந்த ஐடியா என்னுடையது. ‘பாபா படத்தில் ரஜினி எந்த மாதிரி பஞ்ச் டயலாக்குகள் பேசுவார்? வாசகர்களே எழுதுங்கள். பஞ்ச்களை ரஜினியே தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புண்டு’ என்று அந்தப் போட்டிக்குச் சிறிய கமர்சியல் கவர்ச்சியும் கொடுத்தோம்.

கிட்டதட்ட 4000 வாசகர்களிடமிருந்து பஞ்ச் டயலாக்குகள் வந்து குவிந்தன. அவற்றில் நான் சுவையான ஐம்பது பஞ்ச்களை மட்டும் தேர்வு செய்தேன். அவற்றை கம்போஸ் செய்து, ‘அன்புள்ள ரஜினி சாருக்கு, இத்துடன் நாங்கள் அறிவித்த ‘பாபா பஞ்ச்’ போட்டிக்கு வாசகர்கள் எழுதியிருந்த பஞ்ச் டயலாக்குகளை இணைத்துள்ளோம். சிறந்தவற்றை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.’ என்று ஒரு கடிதம் தயாரித்துக் கொண்டோம். நானும் நிருபர் இரா. ரவிஷங்கரும் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்று, ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் த. சத்யநாராணாவைச் சந்தித்துக் கடிதத்தையும் பஞ்ச் டயலாக்குகளையும் கொடுத்தோம்.

அவற்றை ரஜினி சாரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கண்டிப்பாகச் சேர்ப்பிப்பதாகக் கூறினார் சத்யநாராயணா. பட டிஸ்கஷன், ஆர்ட்டிஸ்ட் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கும் ரஜினி இதனைக் கண்டுகொள்ளவா போகிறார் என்று எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அதேநேரம் முயற்சி செய்து பார்ப்போமே என்கிற முனைதல் அது.

கடிதம் கொடுத்து இரண்டு நாட்கள் கழிந்தது. நான் அதனை மறந்து என் கேபினில் ஒரு மேட்டரை எடிட் செய்து கொண்டிருந்தபோது, போன் மணி அடித்தது. எதிர்முனையில் ஒரு குரல் (அவர் பெயர் ஆறுமுகம் என்று நினைவு).
‘நாங்க ரஜினி சார் வீட்லேர்ந்து பேசறோம். சார் உங்கக்கிட்டே பேசணுமாம்….’ நான் லைனில் ஆவலுடன் காத்திருந்தபோது, லைன் இணைப்பு கட் ஆனது.

எனக்குப் படபடப்பு எகிறியது. போன் அருகிலேயே தவிப்புடன் காத்திருந்தேன். மீண்டும் தொலைபேசி அழைப்பு. முதல் ரிங் ஒலித்து முடிப்பதற்குள் பாய்ந்து எடுத்து காதுக்குக் கொடுத்தேன். சில விநாடிகள் இடைவெளியில் அந்தக் காந்தக் குரல்.

“நான் ரஜினி பேசுறேன்….” என்று எதிர்முனையில் கேட்ட காந்தக் குரலில் நான் திகைத்து, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, “வணக்கம் அண்ணே…” என்று சொல்லி வைத்தேன். அந்த நிமிடத்தின் சந்தோஷம் சொல்லில் எழுத இயலாதது... அலுவல் பூர்வமான உரையாடல்களில் ‘சார்…’ என்று அழைப்பதுதான் முறையானதாகும். ‘அண்ணே’ என்பது என்னையும் அறியாமல் நாக்கில் வந்து உட்கார்ந்து கொண்ட வார்த்தை.

ரஜினி தன் ஸ்டைலில் படபடவென்று தொடர்ந்தார். “கருணாகரன்…. வாசகர் பஞ்ச் ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு வாசகரும் என் மீதான தங்கள் அன்பை பாசத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைத்துமே சூப்பர்ப். ரசிகர்களுக்கு நன்றி. ஆனால், இந்த பஞ்ச் டயலாக்களை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காதுன்னு நினைக்கிறேன். அது தேவையில்லாத யூகங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

அதனால் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கிட்டே சொல்லிவைக்கிறேன். படத்தின் இயக்குநரான அவர் செலக்ட் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்…” என்றார் ரஜினி.

“உங்கள் பேட்டி வேணும்ணா…” என்றேன்.

“ஹா… ஹா… இப்ப டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கு. படத்தின் வேலையில் பிஸியாக இருக்கேன் கருணாகரன். இன்னொரு முறை பார்க்கலாம்…” என்றார்.

ரஜினி, தான் தேர்வு செய்ய வேண்டாம் என்று நினைத்திலும் ஒரு காரணம் இருக்கவே செய்தது. காரணம் வந்திருந்த பஞ்ச் டயலாக்குகளில் பல அரசியல் தொடர்பானவை. அவற்றை ரஜினி தேர்வு செய்திருந்தால் அவர் இன்னாரை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்கின்ற யூகங்களைக் கிளப்பிவிடும் என்பதால்தான் அந்தச் சூழலை அப்போது அவர் தவிர்த்தார் என்று நினைக்கிறேன்.

ஓட்டல் அருணாசலாவில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைச் சந்தித்தேன். வாசகர்கள் எழுதிய அந்த பஞ்ச் டயலாக்குகளை மிகவும் பாராட்டினார். தொடர்ந்து முயன்றால் அவர்களில் பலர் சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்றார். நான் அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ‘பாட்ஷா’ ‘பாபா’ இரண்டுமே உச்சரிப்பில் ஒரே சாயலில் உள்ளனவே…. இரண்டு படங்களுக்கும் நீங்கள்தான் இயக்குநர். அப்படியென்றால், இந்தப் படத்திலும் ரஜினி சாருக்கு தாதா கேரக்டர் தானா?’ என்றேன்.

“தாதா கேரக்டர்தான். ஆனால், இது வேறு. இதுக்குமேல் அதைப் பற்றிப் பேச முடியாது. படத்தைப் பார்த்து மக்கள் தெரிந்து கொள்ளட்டும்….’ என்று சஸ்பென்ஸ் காட்டினார். பிறகு அவர் தேர்ந்தெடுத்த 21 பஞ்ச் டயலாக்குகளைக் கொடுத்தார்.

ஆபீஸ் வந்து சுரேஷ் கிருஷ்ணாவிடம் பேசியது, வெளியில் கேட்டது என்று பல விஷயங்களைச் சேர்த்து, ‘பாபா…. வெளிவராத ரகசியங்கள்’ என்று குமுதத்தில் கவர்ஸ்டோரி எழுதினோம். பிறகு, சுரேஷ் கிருஷ்ணா தேர்வு செய்த 21 பஞ்ச் டயலாக்களையும் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிட்டோம். அவற்றில் சூப்பர் பஞ்ச் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து, வெளியிட்டோம். அந்த சூப்பர் பஞ்ச், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் வருவேன்...’

டயலாக்குகள் இடம்பெற்ற ரிப்போர்ட்டர் இதழ் வெளிவந்த அன்று மதியம் ஒரு போன். ‘பாபா’ படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் துரை பேசினார். ‘இஷ்யூவில் வெளிவந்திருக்கிற ஒவ்வொரு டயலாக்கும் ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்...’ என்று கூறி நிறுத்தினார்.

‘அதனால்...? சொல்லுங்க சார்....’ என்று ஆர்வம் காட்டினேன்.

‘பாபா’ ஷூட்டிங் நடக்கிற கேம்ப கோலா வளாகத்துக்கு சாயங்காலம் வாங்க.... ஒரு சஸ்பென்ஸ்....’ என்று கூறிவிட்டு, போனைத் துண்டித்தார்.

தாங்க முடியாத ஆர்வத்தோடு, மாலையில் நானும் ரவிஷங்கரும் கேம்பகோலா வளாகத்துக்கு விரைந்தோம். காம்பவுண்டுக்கு வெளியே திருவிழாப்போல் மக்கள் கூட்டம். செக்யூரிட்டிகளின் பலத்த பாதுகாப்பு. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி.

துரை ஏற்கெனவே கூறியிருந்ததால் நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். வளாகத்திற்குள் நுழைந்தது நமது வாகனம். நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிறச் சட்டையுடன் நம்மை வரவேற்றார் துரை.

‘என்ன சார் சஸ்பென்ஸ்?’ என்றேன் ஆவலாக.

‘பஞ்ச் எழுதிய ஒவ்வொரு வாசகருக்கும் ரஜினி சார் சிறப்புப் பரிசாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். இருபத்தொரு வாசகருக்கும் தலா பத்தாயிரம் வீதம் மொத்தம் இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் பரிசு. அதற்கான டிமாண்ட் டிராஃப்ட்கள் இதோ...’ அவரது படக் கம்பெனியான ‘லோட்டஸ் இன்டர் நேஷனல்’ முகவரியிட்ட கவர்களில் டி.டி.களை வைத்து என்னிடம் ஒப்படைத்தார். வாசகர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தேன்.

‘அதுமட்டுமல்ல. ஒவ்வொரு வாசகருக்கும் அவர் தன் லெட்டர் ஹெட்டில் ‘நீங்கள் எழுதிய ‘பாபா பஞ்ச்’ மிக அருமை. அதைப் படத்தில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறேன். தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும் நன்றி’ என்று எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்...’ என்று கூறிய துரை, ரஜினி சார் எழுதிய அந்தக் கடிதங்களையும் என்னிடம் ஒப்படைத்தார்.

‘சார்... இதையெல்லாம் ரஜினி சாரே தன் கைப்பட வாசகர்களுக்கு கொடுத்தால் ஹைலைட்டாக இருக்குமே....’ என்றேன்.

‘அவர் படத்தில் முழு கவனமாக இருக்கிறார். அதனால், அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமே...’ என்றார் பொறுப்புள்ள நிர்வாகத் தயாரிப்பாளராக.

பரிசு பெற்ற ரஜினி ரசிகர்களைச் சந்தித்து அவர்களது பேட்டிகளையும் வெளியிடலாம் என்று நினைத்து, எங்கள் செய்தியாளர்களை மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பியபோது, ஒரு நெகிழ்ச்சியான உண்மை புரிந்தது. டயலாக்குகள் எழுதிய பலரும் அடித்தட்டு மக்கள். நடுத்தர வர்க்கம். ஆட்டோ டிரைவர், சர்வர், நடைபாதை கடை வியாபாரி, மளிகைக்கடைக் கூலி என்று பல்வேறு ரகத்தினர். இவர்கள் பரிசுப் பணத்தைத் தங்கள் வாழ்க்கைத் தேவைக்காகவும் மகனின் உயர் கல்விக்காவும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகச் சொன்னபோது, மிகவும் மனம் மகிழ்ந்தேன். மூன்று டயலாக்குகளை எழுதி முப்பதாயிரம் பரிசு பெற்ற நடைபாதைக் கடை வியாபாரியான பெரம்பூர் வாசகர் அப்துல் ரஹ்மான் அந்தப் பணத்தை முழுவதுமாக தனது பிசினஸில் இறக்கித் தனது பிசினஸை விரிவுபடுத்தினார். அவரைச் சந்தித்தபோது, அவரும் அவரது மனைவியும் கண் கலங்கினர்.

பட ஷூட்டிங் முடிந்தபிறகு வைத்த பிரஸ் மீட்டில் ரஜினி, ‘பாபா பஞ்ச்’ போட்டியைப் பற்றி குறிப்பிட்டதுடன் அவற்றில் சில டயலாக்குளைப் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
படத்தில் பயன்படுத்தப்பட்ட சில டயலாக்கள்

1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்

2. பாம் போட்டால்தான் வெடிக்கும். இந்த பாபா சொன்னாலே வெடிக்கும்

3. நான் ஒதுங்கினா ஒன்பது அர்த்தம் இருக்கும்.
இறங்கினா எண்பது அர்த்தம் இருக்கும்

4. நாம நினைச்சதெல்லாம் நடக்காது.
நல்லதை நினைச்சால் நடக்காம இருக்காது.

5. நான் வரவேண்டிய நேரம் வந்துடுச்சி.
நீ போக வேண்டிய நேரம் நெருங்கிடுச்சி

6. இந்த பாபாவுக்கு கால்ல விழறவனையும் பிடிக்காது.
காலை வார்றவனையும் பிடிக்காது.

7. பாபாவுக்கு சீட்டு கொடுக்கவும் தெரியும்.
சீட்டைக் கிழிக்கவும் தெரியும்

8. நான் எந்தப் பக்கமும் சாயாத பாபா

9. நான் நினைச்சா சொன்ன மாதிரி.
சொல்லிட்டா முடிஞ்ச மாதிரி

‘பாபா’ படம் என்றென்றும் நினைவுப் பெட்டகத்தில், நிறைந்து கிடக்கும் வைரப் பொக்கிஷம்!

Thanks : Kumutham Reporter Aarumugam...

Friday, 22 November 2013

டிசம்பர் 1 - தலைவர் ரசிகர்களின் சார்பில் ரத்ததான முகாம் ...






வரும் டிசம்பர் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை ) நமது தலைவர் ரசிகர்களின் சார்பாக சென்னை மதுரவாயல் ஆண்டாள் கல்யாண மஹாலில் ரத்ததான முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது .. விருப்பம் உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும் .. மேலும் விபரங்களுக்கு கீழ் காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும் ... நன்றி .
.. 

முரளி : 8056235381 
உதய் : 9750432144

Monday, 18 November 2013

சந்திரமுகி அனுபவம் நினைவிருக்கிறதா கண்ணுங்களா!! - கோச்சடையான்




சூப்பர் ஸ்டாரின் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அறிவிப்பு வந்ததும், நியாயமாக மற்ற பட ஹீரோக்கள் அல்லது தயாரிப்பாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

பொதுவாக ரஜினி படம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வெளியாகிறது. இந்த இடைவெளியில் அத்தனை விசேஷ தினங்களிலும் இந்த அஜீத் - விஜய் உள்ளிட்டவர்களின் படங்கள் வெளியாகவே செய்கின்றன.

இப்போது பொங்கலுக்கு ரஜினி படம் வருகி்றதென்றால்... நியாயமாக இவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டியதல்லவா முறை.. ஆனால் அல்பைகள், கோச்சடையானுடன் போட்டி போடுகிறார்களாம்... ரஜினி பெயரை தங்கள் விளம்பரத்துக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டே, அவருக்கு குழி தோண்டும் குள்ள நரிகள் இவர்கள்...

போடா... ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்...

சந்திரமுகி அனுபவம் நினைவிருக்கிறதா கண்ணுங்களா!!

நாங்க ரசிகனுங்க இல்ல வெறியனுங்க...






தலைவர் ரஜினி மற்ற நடிகர்களை ஆதரிக்கலாம். அது அவர் பெருந்தன்மை. என்னைப் போன்றவர்களுக்கு அந்த பெருந்தன்மையெல்லாம் கிடையாது. கடைசி மூச்சுவரை ரஜினிக்கு மட்டுமே ரசிகனாக இருக்க முடியும். அவரை.. அல்லது அவர் படங்களை ஒரு போட்டியாளனாக எதிர்கொள்ளும் எவரு(னு)ம் நமக்கு எதிரானவர்(ன்)தான்!

Thanks : Envazhi

கோச்சடையான் - மலையுடன் மோதாதே ...!!!


பொதுவாக ரஜினி படங்கள் ரிலீசாகும்போது, அதற்கு ஒரு வாரம் முன்பும் இரண்டு மூன்று வாரங்கள் கழித்தும் வேறு படங்களை யாரும் வெளியிடுவதில்லை. இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடரும் வழக்கம். கடைசியாக ரஜினி படம் வந்தபோது, அதனுடன் மோதியவை கமலின் மும்பை எக்ஸ்பிரசும் விஜய்யின் சச்சினும். இரண்டுமே தோல்வியைத் தழுவின. சந்திரமுகி சரித்திரம் படைத்தது. அதன் பிறகு அவரது எந்தப் படத்தோடும் மோத வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை. காரணம், ரஜினியின் சிவாஜியிலிருந்துதான் ஒரே நேரத்தில் அதிக அரங்குகளில் படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் போட்ட பணத்தை குறுகிய காலத்தில் எடுக்கும் முறை அறிமுகமானது. ரஜினி போன்ற உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஹீரோக்களின் படங்கள் சோலோவாகக் களமிறங்குவதுதான் திருட்டு விசிடி பிரச்சினையிலிருந்து படத்தைக் காக்கும் என தயாரிப்பாளர்களும் இந்த சிஸ்டத்தை ஆதரித்தனர். இந்த நிலையில், ரஜினியின் புதுப் படம் கோச்சடையான் பொங்கலுக்கு வெளியாவதாக அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவிதச்தார். எனவே வீரம், ஜில்லா போன்ற படங்கள் சில வாரங்கள் கழித்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஜினியின் படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பிறகும், தனது வீரம் படத்தை அதே நாளில் களமிறக்கப் போவதாக அஜீத்தும் அவரது தயாரிப்பாளரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஜில்லா படத்தையும் பொங்கல் அன்றே, அதுவும் கோச்சடையான் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 10-ம் தேதியே வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பாளர் மகன் ரமேஷ் அறிவித்துள்ளார்.

Thanks : One India

Tuesday, 1 October 2013

அதுக்கெல்லாம் கலங்குவாரா ரஜினி?



இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் நடந்த சில அசவுகர்யங்களால் ரஜினி அப்செட் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க, அவரோ கூலாக இருக்கிறார். இருந்தாலும், நான் அங்கு போயிருக்கவே கூடாது என்று இவர் சொன்னதாக இணையங்களில் வந்த செய்தி அவரை கவலைப்படுத்தியிருக்கிறதாம். நான் யாரிடமும் அப்படி சொல்லவேயில்லை. இத்தனைக்கும் என்னை உட்கார சொல்லி முன் வரிசையில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்தார்கள். நான்தான் நிற்கிறேன் என்று கூறிவிட்டேன். இந்த பிறவியில் அந்த இடத்தில் நான் நிற்க வேண்டும் என்பது விதியாக இருக்கும்



பட்சத்தில், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதுதான் சரி. அப்படி நிற்காமல் நான் உட்கார்ந்தால் அடுத்த பிறவியில் வேறெங்காவது நிற்க நேரிடும் என்று இந்த சம்பவத்திற்கும், செய்திக்கும் ஆன்மீக ரீதியாக ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் அவர். வாழ்வில் அனுபவங்களை சேகரித்த யாருக்கும் அவமானம் வந்து சேர்வதேயில்லை. அது மற்றவர்களுக்கு அவமானமாக தெரிந்தாலும்... கிரேட் ரஜினி சார்.

Thanks : indiaglitz.com


Monday, 30 September 2013

இன்று எந்திரன் வெளியாகி நான்காவது ஆண்டு தொடக்கம்...




பலரது எதிர்ப்பு...

பற்பலரது எதிர்பார்ப்பு...

சிலரது வயிற்றெரிச்சல்..

பலருக்கு கிடைத்தது..

சிலருக்கு கிடைக்கவில்லை...

பலர் காத்திருப்பு..

யா யா..

எங்கள் இந்திரன் களம் களம் இறங்கிய நாள் இன்று...




"தலைவா" \m/

Tuesday, 13 August 2013

தலைவர் ரஜினிகாந்த் பற்றி ...



பெயர்..= சூப்பர் ஸ்டார், தலைவர்.
வயது.= அப்பிடின்னா ?
இடம் =..எப்பவுமே முதலாமிடம்தான்.
உயரம் = .வானத்துக்கு ஏதுங்க உயரம் ?
எடை .= .இதுவரை யாருமே சரியாக எடை போடல.
நிறம் = கருப்பு வெள்ளை. முதல் நிறம் புறம், இரண்டாம் நிறம் அகம் .
தலைமுடி.= .எதிரிகளின் எண்ணிக்கை. ரொம்ப குறைவாக இருக்கும், அப்பப்போ மொட்டை போடுவதால் இல்லாமலும் போகும்.
பலம் .= .எங்களுக்கு அவர்.
பலவீனம் = .அவருக்கு நாங்கள்.
நண்பர்கள் .= பலமும் பலவீனமும்.
எதிரிகள்.= எப்போதும் தோற்பதற்கு தயாராக இருப்பவர்கள்.
துரோகிகள் = ஒருநாள் மன்னிப்பு கேட்க்கப்போகிறவர்கள்.
நடை .= .சிட்டிக்குள் ஓவர் ஸ்பீட்.
படை..= .எப்போதும் தயார் நிலையில்.
சாதனை =. எத்தனை next வந்தாலும் rest ஆகாமல் இன்னமும் best ஆக இருப்பது/இருக்கப்போவது.


CREDIT GOES TO :RAMA SUBRAMONI M.S

Friday, 12 July 2013

ஜூலை 13 - ரஜினி என்ற மனிதரின் பலத்தை கண்டு உலகம் வியந்த நாள்..!



ஜூலை 13
மூன்று மாத அச்சம், பரபரப்பு,
வதந்தி முடிவுக்கு வந்த நாள்..!
ரஜினி என்ற மனிதரின்
பலத்தை கண்டு உலகம் வியந்த நாள்..!
சிங்கப்பூரை அதிர வைத்து..!
எமனை வென்று உலகை வியக்க
வாய்த்தநாள்..!
பல இலச்ச வேண்டுதல்கள் உண்மையான
நாள்..!
தமிழ் திரை உலகம் மீண்டும் பிறந்த நாள்..!!
நீ இல்லாத சினிமா வேண்டாம்
என்று முடிவெடுத்தேன். .!!
உன் ரானாவுக்காக காத்து இருந்தேன்..!!
உன்
குரலை கேட்டு கேட்டு கண்ணீர்வடித்தேன
்..!
உன்னை பார்க்கும் நாள்
எபொழுது என்று தவம் இருந்தேன் வந்தாய்
நீ ஜூலை 13..:-):-)
அன்று உன் புனைகை மாறவில்லை உன்
வேகம் மாறவில்லை உன் ஸ்டைல்
மாறவில்லை..:-):-)
எங்கள் மேல் நீ கொண்ட அன்பும்
மாறவில்லை..
நாங்களும் மாறவில்லை தலைவா..!!
உன் ரசிகனாய்உன் பக்தனாய் உன்
வெறியனாய் காத்து இருக்கிறோம்
கோச்சடையன் தரிசனம் காண..!!
இன்று..!!!!

Thanks : Fb rajini fans Club..

Saturday, 1 June 2013

தலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…



தலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…

அவர் உயிரும் உடலும் அவருக்கு மட்டுமே சொந்தமானதன்று. இதோ இந்தகோடிக்கணக்கான இதயங்களில் அவர் இதயத்தை பத்திரப்படுத்தி ­ வைத்திருக்கிறோம ். அந்த உயிர் எந்த உலகுக்குப் போனாலும் நாங்கள் விடாமல் போரிட்டு, உயிரைக் கொடுத்தாவது எங்கள் உயிரணைய தலைவர் ரஜினியை மீட்போம். அதை இந்த உலகம் ஏற்கெனவே ஒருமுறை பார்த்திருக்கிற ­து.
கொளுத்தும் ஒரு கோடையில் திருமூர்த்தி மலையிலிருந்து பண்ணாரி வரை வெறும் காலுடன் நடந்து போய் தம் அன்புத் தலைவனின் உயிருக்குப் போராடிய கூட்டம் உள்ள மண் இது!
உலகிலேயே முதல் முறையாக 33 நாடுகளில் வசிக்கும் மக்கள் பிரார்த்தனை செய்து மீட்டெடுத்தஉயிர் இந்த ரஜினியுடையது. எத்தனையோ விஷமிகள் பிரச்சாரம் செய்தும் இந்த நேர்மையாளனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என பக்குவமடைந்த மனம் கொண்டவர்கள் அவரை வாழ வைக்கும் இந்த ‘தெய்வங்கள்’!
இதெல்லாம் தெரிந்துதான் முன்பே ஒரு முயற்சி செய்து, இந்த பாசப் போராட்டம் பார்த்து எம் தலைவரை எங்களிடமே ஒப்படைத்தான் எமன் என்பதை ஒவ்வொரு முறை வதந்தி கிளப்பும் போதும் நினைவில் வையுங்கள்!

ரஜினி என்பது வெறும் பெயரல்ல.. அது ரஜினி எனும் பெரும் சமூகத்தின் உணர்வு. உணர்வுடன் விளையாடதீர்கள்!

Friday, 22 March 2013

ரஜினி ரசிகர்களின் வேண்டுகோள்... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் ..






அனைத்து ரஜினி ரசிகர்களுக்கு, தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்திருந்தால் 1996 வருடமே வந்திருப்பார். ஆனால் இன்று வரை அரசியலுக்கு வராமல் மவுனம் சாதித்து வருகிறார். பதவியை விரும்பாத பண்பாளனாக தலைவர் இருப்பது நமக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் கூட, அவரை போல் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட சுயநலமில்லா ஒரு மனிதனை இந்த தமிழகத்தில் பார்ப்பது மிகவும் அரிது. இப்படிபட்ட ஒரு தலைவனை, மக்கள் சக்தி கொண்ட மாவீரனை, அரசியல் கட்சிகளும், கட்சி தலைவர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தேர்தல் நேரத்தில் மட்டும் தலைவருன் நட்பு பராட்டுவதும், தேர்தல் முடிந்தவுடன் விட்டு விலகுவதும் நாம் அனைவரும் இதுவரை கண்டு வந்த மறைக்க முடியாத உண்மையாகும். இனியும் இந்த நிலை நம் தமிழகத்தில் தொடர கூடாது. உழைப்பவனே ஊதியம் பெற வேண்டும், மக்கள் மனதில் நிலைத்தவனே தமிழகத்தை ஆள வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு வங்கியாக நம் தலைவரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் பின்னால் நாம் செல்லாமல், நம் தலைவரின் பின்னால் அந்த அரசியல் கட்சிகள் அணிவகுத்து நிற்கும்படி நம் பலம் என்னவென்பதை நம் தலைவருக்கு தெரிய வைக்க வேண்டும். நம் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இதுவரை இருந்தோம், அதற்கு நமக்கு கிடைத்த பலன் தலைவரின் அமைதி மட்டுமே. அவரின் மவுனம் மட்டுமே. இனியும் அமைதியாக இருந்தால் ஒரு நல்ல மனிதனை, மக்கள் சக்தி கொண்ட எளியவனை இந்த தமிழகம் பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது என்ற இன்றைய நிகழ்வுகளின் கருப்பு பக்கத்தை நாளைய சந்ததிகள் வேதனையோடு சொல்லி கொள்ளும் ஒரு இழிநிலை உருவாகும். அதற்க்கு இடமளிக்காது, நம் தலைவரை அரசியலுக்கு வரவைக்க நாம் இனி ஏதாவதொன்று செய்தாக வேண்டும். அது புரட்சியானாலும் சரி, அகிம்சையானாலும் சரி. நம் தலைவரை அரசியலுக்கு வர வைக்க வேண்டும், இது தான் நமது அடுத்த செயல்பாடாக இருக்க வேண்டும்.


Saturday, 5 January 2013

நமது சகோதரி வினோதினிக்கு உதவிடுங்கள் ..




நாமெல்லாம் வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் போராடுபவர்கள் நம்மை சுற்றி எண்ணற்றோர் உள்ளனர். அந்த வகையில் நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள். முதலில் இறைவனுக்கு அதற்காக நன்றி சொல்வோம்.
நோய், விபத்து, போர் என்று நம்மை சுற்றி அன்றாடம் பாதிக்கப்படும் ஜீவன்கள் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி போராடுபவர்களுக்கு இந்த புத்தாண்டு முதல் நம்மால் இயன்ற சிறிய உதவி ஏதேனும் செய்ய உறுதி ஏற்போம். அள்ளிக்கொடுக்கவேண்டாம். கிள்ளிக்கொடுத்தால் கூட போதும். சிறு துளி பெருவெள்ளமாகி சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்குமே?
டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நாடே கொந்தளித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலையில், நம் தமிழகத்தில் பட்டு துளிர்க்க வேண்டிய ஒரு பூச்செடி ஒரு பாதகனின் செயலால் கருகிவிட்டது ஏனோ ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.
சென்ற மாதம் (நவம்பர் 14) நடைபெற்ற இந்த கொடூர சம்பவம்… தற்போது அனைவராலும் மறக்கப்பட்டே விட்டது.
முதலில் செய்தித் தாளில் இந்த செய்தியை பார்த்தபோது இதன் தீவிரத்தை நான் அறிந்திருந்தாலும் தற்போது தான் (தாமதமாக) முழுமையாக உணர்ந்துகொண்டேன். 



ஒருதலைக் காதலாக தம்மை காதலித்த ஒரு வாலிபரின் காதுலுக்கு மறு‌‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததா‌ல் ஆ‌சி‌ட் ‌‌வீச‌ப்ப‌ட்டு இர‌ண்டு க‌ண்களை இழ‌ந்து த‌வி‌க்கு‌ம் சா‌ப்‌ட்வ‌ர் எ‌ன்‌ஜி‌னிய‌ர் ‌வினோ‌தி‌னி த‌ற்போது, மரு‌த்துவ செலவு‌க்கு ‌பண‌ம் இ‌ல்லாம‌ல் த‌வி‌‌த்து வரு‌கிறா‌ர். ‌வினோ‌தி‌‌னி‌யி‌ன் உற‌வின‌ர்க‌ள் த‌ற்போது பொதும‌க்க‌ளி‌ன் உத‌வியை நாடியு‌ள்ளன‌ர்.
புது‌ச்சே‌ரி, காரைக்காலை சேர்ந்த ஜெயபாலன் எ‌ன்பவ‌ரி‌ன் மகள் வினோதினி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவ‌ர், செ‌ன்னை சைதாப்பேட்டையில் உ‌ள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் காரைக்காலை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் என்பவர் வினோதினியை காதலித்துள்ளார். ஆனால் வினோதினி அவரது காதலை ஏற்க மறு‌த்து‌வீ‌ட்டா‌ர். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கடந்த 14ஆ‌ம் தேதி காரைக்கால் பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த வினோதினி மீது ஆசிட் வீசினார்.
முகம், உடலில் பல பகுதிகள் வெந்த நிலையில் வினோதினி கீழ்ப்பாக்கம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். தீக்காயதுறை தலைவர் டாக்டர் ஜெயராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் வினோதினிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆனா‌‌ல் மரு‌த்துவ‌ர்களா‌ல் வினோதினியின் இரு கண்க‌ளி‌ன் பா‌ர்வையை குண‌ப்படு‌த்த முடியாம‌ல் போ‌ய்‌வி‌ட்டது. இர‌ண்டு க‌ண்களு‌ம் எரிந்து‌வி‌ட்டதா‌ல் ‌வினோ‌தி‌னி பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. கண்களு‌ம் சதையால் தைத்து மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
திரவ உணவு மட்டும் டியூப் மூலம் ‌வினோ‌தி‌னி‌க்கு வ‌ழ‌ங்க‌ப்படு‌கிறது. நினைவு வரும் நேரத்தில், “எனக்கு கண்ணே தெரிய‌வி‌ல்லையே. எப்படி வாழப்போகிறேன்? என்னை ஏன் காப்பாத்த பார்க்கிறீங்க?” என்று ‌வினோ‌தி‌னி புலம்புவதை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் வடிக்கி‌ன்றன‌ர்.
செக்யூரிட்டியாக வேலை பார்க்கு‌ம் ‌வினோதினியின் தந்தை, மக‌ளி‌ன் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரு‌கிறா‌ர். உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து‌ள்ளா‌ர்.
ஜெயபாலன் பெயரில் கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் ஒரு வங்கி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள். உதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக கீழே தரப்பட்டுள்ள அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பண உதவி செய்யலாம்.
நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற அளவிற்கு ஏதாவது பொருளுதவியை இந்த திக்கற்று நிற்கும் குடும்பத்தினருக்கு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இறைவனுக்கு செய்யும் சேவையைவிட துன்பத்தில் இருப்பவரின் கண்ணீரை துடைப்பது மேலானது. அவசியமானது. அவசரமானது.
இதைப் படித்துவிட்டு உங்களில் எவரேனும் ஒருவர் இவர் குடும்பத்திற்கு உதவி செய்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே.



V. Jayabalan,
Indian bank
A/c no 603899558
IFSC Code – IDIB000K037


Thanks To onlysuperstar.com Sundar sir..