நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவரை கவுரவிக்கும் வகையில் ரஜினி குறித்த இசை ஆல்பம் வெளியிடப்படுகிறது. நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இந்த இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார். வருகிற 12-12-12 அன்று ரஜினிகாந்த் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ராகவா லாரன்ஸ் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி. எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த குறுந்தகடு வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன். இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும், என்றார்