Tuesday, 31 March 2015

தலைவர்...

எந்த ஒரு கட்சிக்கும் சொந்தக்காரரில்லை. எந்த ஒரு தனிக் கட்சியை மட்டும் ஆதரிக்கவுமில்லை.

இன்றைய தேதியில் தமிழர்களிடத்தில் ‘தலைவர்’ என்று சொன்னால் அது இன்று பிறந்த நாள் கொண்டாடும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மட்டும் தான்.

தானைத்தலைவர், ஆனைத்தலைவர் என்று பலர் இருக்கலாம். ஆனால் அனைத்து தமிழ் மக்களாலும் உலகெங்கிலும் ‘தலைவர்’ என்று அன்போடு உச்சரிக்கப்படுவது ரஜினி ஒருவர் தான்.

தமிழர்களை ஒன்றிணைக்கும் மந்திரச் சொல் ‘ரஜினி’.

அவரது நடிப்பை பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது அரசியல் நிலைப்பாடுகளைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது ரசிகர்களின் ஆரவாரம் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது திரைப்பட வெற்றிகள் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது ஸ்டைல் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது வெளிப்படையான பேச்சு பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவர் தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதினால் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது உறுதியான இறை வணக்கம் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது தமிழ் உச்சரிப்பு பிடிக்காதவர்கள் இருக்கலாம். அடிக்கடி ரசிகர்களை நேரில் சந்திக்காதது பிடிக்காதவர்கள் இருக்கலாம்.

ஆனால், அவரைப் பிடித்தவர்கள் எண்ணிக்கையைக் கூட்டினால் இந்த பிடிக்காதவர்கள் லிஸ்ட் மிகமிகமிக கம்மி தான்!

எல்லோரையும் எல்லாவிதத்திலும் எல்லாராலும் திருப்திப்படுத்தி விடவே முடியாது. பொதுப் பிரச்னையில் கூட ஒன்று பட முடியாது என்று வீம்பு பிடிக்கும் தமிழர்கள் ‘ரஜினி’ என்ற மந்திரச் சொல்லில் மட்டும் கட்டுண்டு இருக்கிறார்கள்.

“ரஜினி இமேஜ் எல்லாம் தமிழ்நாட்டு தமிழர்களிடம் மட்டும் தான்” என்று உலக அளவில் பெயரும் புகழும் அடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டு சில அல்லு சில்லுகள் வசனம் பேசும் போதெல்லாம் உடலின் சகல பாகங்களிலிருந்தும் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

தமிழ் சினிமா மட்டுமல்ல.. இந்திய சினிமாவின் இன்றியமையாத ஆளுமையாக தலைவர் ‘ரஜினி’ உருவாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன.

அவர் மீது எறியப்படும் அம்புகளையெல்லாம் அவர் மாலைகளாக்கி மறுநாள் தூர வீசி விடுகிறாரோ என்று எண்ணத் தோன்றும் வண்ணம் எதுவுமே நடவாத மாதிரி நடந்து கொள்வது தான் அவரது சிறப்பம்சமே!

அவரது திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று பேச்சு அடிபடும் நாளிலிருந்தே திரைத்துரையாகட்டும், பத்திரிகைத்துறையாகட்டும்.. தானாகவே ஒரு விறுவிறுப்பு தொற்றிக் கொள்ளும். ஒவ்வொரு செய்தியும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

தாத்தா,பாட்டி முதல் பேரன், பேத்தி வரை அத்தனை பேரையும் கவர்ந்திருக்கும் மந்திரச் சொல், ‘ரஜினி’

அவரை திறமையற்ற நடிகர் என்று விமரிசிக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ அவருடைய படங்கள் மாபெரும் வெற்றி பெருகின்றன. இன்றைக்கும் அவருடைய நூற்று சொச்ச திரைப்படங்களில் ஒரு நாட்டுக்கொரு நல்லவனோ, ஒரு பாபாவோ, ஒரு குசேலனோ தேடி எடுத்து தானே தோல்வியைச் சொல்ல வேண்டியிருக்கிறது. மக்களை மகிழ்விப்பவனே ஒரு திறமையான கலைஞன். அந்த விதத்தில் சந்தேகமேயில்லாமல் ரஜினி ஒரு மாபெரும் திறமைசாலி தான்!

வாழ்க்கைப் போராட்டத்தில் நொடிக்கு நொடி சிக்கி சீரழிந்து ஒரு இரண்டரை மணி நேரமாவது சந்தோஷமாக இருக்க மாட்டோமா என்று திரைப்படத்தைப் பார்க்கப் போகும் மனிதனை அங்கேயும் அதே புலம்பலைப் பாடி அழ வைப்பது தான் திறமை என்றால் அப்படிப்பட்ட திறமையை ரஜினிக்கு கொடுக்காததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்!

தலைவரின் திரைப்படங்களில் லாஜிக் இல்லை என்று ரூம் போட்டு யோசித்து காரணம் கண்டு பிடிப்பவர்கள் சிலர்!

இருக்கட்டுமே. ‘லாஜிக் இல்லா மேஜிக்’ - இதான் ரஜினி சினிமா!

கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடந்த 30 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு முறையும் ரஜினியின் தாக்கம் இல்லாமல் இண்டஸ்ட்ரி வளரவே இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.

வில்லன் கதாநாயகனாக ஆகலாம் என்ற கூற்றை பரவலாக ஆக்கியது ரஜினியின் வரவிற்க்குப் பிறகு தான்.

ஹீரோ என்றால் கட்டுடல், வெண் நிறம், அழகு, சீரான தலை முடி என்றெல்லாம் இருந்ததை கலைத்துப் போட்டது ரஜினியின் வரவிற்க்குப் பிறகு தான்.

ஹீரோவே காமெடியும் செய்ய முடியும் என்று தொடர்ந்து பல படங்களில் வந்தது தலைவரின் வரவிற்க்குப் பிறகு தான்.

இதற்கு முன்பு பல நடிகர்கள் நேரடி அரசியலிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். ஆட்சியையெல்லாம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் நேரடி அரசியலில் ஈடுபடாமலேயே அரசியலுக்கு இவர் வந்து விடுவாரோ என்றும், வந்து விடப்போகிறாரே என்றும், வருவாரா மாட்டாரா என்றும் பலவாறு பேச்சு அடிபடுவது ரஜினி ஒருவருக்கு தான்!

“என் பேரு மாணிக்கம்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு” என்று லேசான புன்முறுவலுடன் கையை ஊன்றி கண்ணைச் சுருக்கி பார்த்தவாறு ஆரம்பிக்கும் காட்சி தான், அதன் பிறகு வந்த பல திரைப்படங்களின் மைய இழை! அதே பாணியில் இன்று வரை எத்தனை எத்தனை திரைப்படங்கள்?!

”இந்த டயலாக்கை இவர் பேசினால் தான் எடுபடும்” என்று இருந்தாலும் புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைக் குட்டிகளாய் வசனங்கள் வைத்துக் கொண்டு பாடாய்ப் படுத்தும் பல நடிகர்களுக்கு தெரியுமா இந்த நிலையை அடைய ரஜினி பட்டிருக்கிற கஷ்ட நஷ்டங்கள் எவ்வளவு என்று?

ஒரு ரஜினி சொன்னால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள ஓடோடி வந்த குழந்தைகள், தாய்மார்கள் எத்தனை பேர்?

பெங்களூர் நகரப் பேருந்தில் விசிலடித்து வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி ராவ் கெய்குவாட்டுக்கு இன்று விசிலடித்து ரசிக்க கோடானு கோடி ரசிகர்கள் தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும், மாற்று மொழி ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழனாய், தமிழ்ப் பெண்ணை மணந்து, தமிழகத்தில் வாழ்ந்த்து, தமிழ் திரையுலகத்தினை மட்டுமில்லாமல் அதனை சார்ந்த அனைத்து ஊடகங்களையும் இன்றளவிலும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் நிஜ தமிழன், தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

Friday, 20 February 2015

ரஜினிக்கு தோல்வியா... 'யானை தும்மினாலும் அது ஏழூருக்கு சாரல்டா...!!



புதையல் அரக்கனுக்கு சொட்டு ரத்தம் கொடுத்தா போதும், பொட்டி பொட்டியா தங்கம் நமக்குதான் என்கிற பேராசை இல்லாத மனுஷன் ஒருத்தன் இருந்தா, மற்ற எல்லாருடையை ஆசையையும் கொழுக்கட்டையா உருட்டி வச்சு படைக்கலாம் அவனுக்கு. சினிமா, அரசியல், பொதுவாழ்க்கைன்னு எங்கு திரும்பினாலும், ‘எனக்கு தர்றீயா, இல்ல எடுத்துக்கட்டா...?'ங்கிற மனுஷங்கதான் அதிகம். இப்போதும் கூட ‘லிங்கா' படம் ஹிட்டா, இல்லையா என்கிற வாதங்களை மட்டும் சல்லடை போட்டு கழித்துவிட்டால் முகப் புத்தகமும் சரி, ட்விட்டரும் சரி. அவையெல்லாம் காலி ரேக்குகளாகதான் காட்சியளிக்கும். ‘பார்க்கிங் பணத்திலேயே பாதி வசூல் வந்தாச்சு. அவங்க கொடுத்ததெல்லாம் பொய் கணக்கு' என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ‘படம் ஓடலேன்னா பணம் ரிட்டர்ன் என்கிற விஷயத்தை தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தியதே அவர்தானேப்பா. இதே ஊர்ல இதுக்கு முன்னாடி எத்தனையோ படம் ஓடாம போய் விநியோகஸ்தர்களின் விலா எலும்பை பதம் பார்த்துருக்கு. யாராவது திருப்பிக் கொடுத்தாங்களா?' என்கிற குரல்களும் ஆவேசமாக ஒலிக்கிறது ரசிகர்கள் மத்தியில். ‘ரஜினி இனி அப்பா வேடங்களில் மட்டும்தான் நடிக்கணும்' என்று கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு சொல்கிறது முன்னணி இணையதளம் ஒன்று. ‘தலைவர்னா மாஸ். மாஸ்னா தலைவர்தான். யாருகிட்ட?' என்று மார் தட்டுகிறது இன்னொரு இணையதளம். இப்படி ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் குடம் குடமா பால் ஆர்டர் பண்ணுது ஒரு கோஷ்டி. குடம் குடமா விஷமும் ஆர்டர் பண்ணுது இன்னொரு கோஷ்டி. சவுக்கு மரமோ, போதி மரமோ? இரண்டையும் நிழலா பாக்குறவன் ஞானி. விறகா பார்க்குறவன் வியாபாரி. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரஜினி. இதே கலகத்தையும் இதற்கு முன் சந்தித்தவர்தான் அவர். கொஞ்சம் ரிவர்ஸ்சில் போவோமா? ‘பாபா' படுதோல்வின்னு செய்தி வந்த பின்பு கோடம்பாக்கத்தில் சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் உற்சாகமாக கூடிய பார்ட்டிகளில், சப்பி உறிஞ்சப்பட்ட காலி பாட்டில்களை பொறுக்கி பழைய விலைக்கு போட்டிருந்தாலே, ஒரு பட்ஜெட் படத்தை தயாரிச்சிருக்கலாம். அந்தளவுக்கு எல்லாருமே குறி வச்ச நாற்காலி ரஜினியுடையது. பாபா விஷயத்தில் கஷ்டம் பார்க்காம உழைச்சோம், உழைப்புக்கு பிறகும் கஷ்டம் பார்த்தோம்ங்கிற ஒரே நேர்க்கோட்டுல ஆறுதலை ஓடவிட்டுவிட்டு, வழக்கம் போல இமயமலைக்கு இடம் பெயர்ந்தார் ரஜினி. அவர் இல்லாமலே சினிமாக்கள் வந்தன. அவர் இல்லாமலே வெற்றிப்படங்களும் வந்தன. யார் யாரோ பொன்னாடைக்கு சொந்தக்காரர்கள் ஆனார்கள். செல்லாக் காசெல்லாம் ‘செக்'கில் சைன் போட்டது. அப்போதும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் ரஜினி. வருஷங்கள் ஓடின. ஆனால் அவர் தேடிய கதை கிடைக்கணுமே? சினிமா விழாக்களுக்கு வாங்க என்றார்கள். இலக்கிய விழாக்களுக்கும் அழைத்தார்கள். எல்லாவற்றுக்கும் மெல்லிய புன்னகையை அனுப்பிவிட்டு அர்ஜுனன் வித்தைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார் ரஜினி. அந்த நேரத்தில் விக்ரம் நடித்த ‘சாமி' படத்தை பார்த்தார் ரஜினி. அந்த கதையில் நாம் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனை ஓடாமலிருக்குமா? அந்த படத்தின் வெற்றிவிழாவில்தான் பெரிய இடைவெளிக்கு பிறகு கலந்து கொண்டார் அவர். அந்த மேடையில் ‘ஒண்ணுச்சாமி, ரெண்டுச்சாமி, மூணுச்சாமி... ஆறுச்சாமி' என்ற வசனத்தை ரஜினி அப்படியே பேசிக்காட்ட, பிய்த்துக் கொண்டது விசில். ‘இனிமே நமக்கு சினிமா வேணுமா?' என்று கூட சமயங்களில் நினைத்து வந்தவருக்கு, ஆறுச்சாமி வந்துதான் ஆர்வத்தை துண்டினான். நடுவில் கே.எஸ்.ரவிகுமார் வந்து ‘ஜக்குபாய்' கதையை சொன்னார். மறுபடியும் ஒரு பீரங்கிக்கு குண்டுகள் நிரப்பப்பட்டது. சற்றே ஆர்வமானார் ரஜினி. ‘இறைவா.... எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று' என்கிற பஞ்ச் வசனங்களோடு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இருந்தாலும் கற்பூர வெளிச்சத்துல காபி டம்ளரை சுட வச்ச மாதிரி, ஏனேதானோன்னு கதை இருக்கறதா மட்டும் அவருடைய உள் மனசு சொல்லிகிட்டேயிருந்திச்சு. ஒருபுறம் பட வேலைகள் கனஜோராக நடந்து கொண்டிருக்க, பெங்களூரில் ஒருமுறை தன் நண்பர்களோடு ‘ஆப்தமித்ரா' படம் பார்த்துக் கொண்டிருந்தார். விஷ்ணுவர்த்தன் ஹீரோவாக நடித்த படம் அது. சரக்கென்று பொறிதட்டியது அவருக்கு. இதுதான் நாம தேடிகிட்டு இருந்த படம் என்று. பி.வாசுதான் அந்த படத்தின் இயக்குனர். தமிழ்சினிமாவில் அவரது சகாப்தம் முடிந்த நேரம் அது. உடனே பி.வாசு அழைக்கப்பட்டார். ‘ஜக்குபாய் ஓரமா இருக்கட்டும். இந்த கதையை பண்ணலாம்' என்றார் ரஜினி. மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மணிசித்திரத்தாழ்' என்ற படத்தின் ரீமேக்தான் இந்த ‘ஆப்தமித்ரா'. மணிசித்திரதாழ் படத்திற்கும் ஆப்தமித்ராவுக்கும் நடுவிலேயே நிறைய வித்தியாசங்களை கொடுத்திருந்தார் பி.வாசு. அதையும் இன்னும் மெருகேற்ற வேண்டும் என்றார் ரஜினி. ஒருமுறை ஒரு படத்தில் நுழைந்து கொண்டால், அதன் ஜீவன் முழுக்க தன் மூச்சென்று நினைப்பார் ரஜினி. எந்நேரமும் அதே சிந்தனைதான் ஓடிக்கொண்டிருக்கும் அவருக்குள். அந்த வேட்டையன் பாத்திரம் ரஜினி சொன்ன விஷயம். அதையெல்லாம் விட படத்தில் வரும் அந்த லக லக லக...! வழக்கம் போல இமயமலை சென்றிருந்தார் ரஜினி. அங்குள்ள மலைஜாதி மக்கள் சற்றே இருட்டிய பின் வரிசையாக நடந்து செல்வதை பார்த்தாராம். எதையோ முணுமுணுத்தபடியே அவர்கள் செல்வதை கவனித்த ரஜினி, ஒருவரை நிறுத்தி ‘என்ன முணுமுணுக்கிறீங்க?' என்று கேட்க, அவர்கள் சொன்னதுதான் இந்த லகலகலக... அப்படியென்றால்? பேய் பிசாசே தூரப்போ என்று அர்த்தமாம். மிக பொருத்தமாக அதை கொண்டுவந்து சந்திரமுகியில் நுழைத்தார் ரஜினி. அதுமட்டுமா? ரின் சோப் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் அமிதாப்பச்சன். ஒரு சிறுவன் ரின் சோப் பற்றி அமிதாப்பிடம் புகழ்ந்து பேச பேச, நடுநடுவே அவர் கேட்கிற கேள்விதான், ‘நான் கேட்டேனா...?' என்பது. வடிவேலுவுக்கு பேய் கதை சொல்லும்போது, ‘நான் கேட்டேனா'வை பொருத்தமாக அங்கு நுழைத்தார் ரஜினி. சந்திரமுகியில் மட்டுமில்ல, அவர் நடித்த எல்லா படங்களிலும் ரஜினியின் நகாசு வேலைகள்தான் படத்தையே உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது. எந்திரன் கதையை கேட்டுவிட்டு, ‘அந்த ரோபோவுக்கு என்ன உருவம் கொடுப்பீங்க?' என்று கேட்டதால்தான், அதையும் ரஜினியாகவே நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாம் ஷங்கருக்கு. ‘நான் ஒரு தடவ சொன்னா நுறு தடவ சொன்ன மாதிரி' என்கிற பஞ்ச் வசனம், உதவி இயக்குனர் திருப்பதிசாமி என்பவர் சக உதவி இயக்குனரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ரஜினியின் காதில் விழுந்த விஷயம். அதைதான் தட்டி தட்டி பட்டி பார்த்து அப்படியொரு பஞ்ச்சாக வடிவமைத்தார். அதற்கான சன்மானத்தை அந்த வசனம் டப்பிங் ஸ்டூடியோவில் பதிவாகும் முன்பாகவே திருப்பதிசாமிக்கு கொடுத்து திருப்தியடைந்தவர்தான் சூப்பர் ஸ்டார். தோல்வி தொடாத மனிதர்களே இல்லை. ஏன் கடவுளுக்கே அந்த நிலைமை வந்திருக்கிறது. லிங்கா தோல்விதான். விநியோகஸ்தர்களுக்கு ரிட்டர்ன் கொடுத்துருங்க என்று கூறிவிட்டார் ரஜினி. ஆனால் அதற்காக உலகம் அமைதியாகவா இருக்கிறது? ரஜினியின் அடுத்த படம் யாரோடு? இந்த கேள்வி இல்லாத தொலைக்காட்சிகள் இல்லை. மாத, வார, நாளிதழ்கள் இல்லை. இணையதளங்கள் இல்லை. ஷங்கருடன் எந்திரன் பார்ட் 2 தான் நெக்ஸ்ட் என்கிறார்கள் இவர்கள். இல்லையில்லை.... எஸ்.எஸ்.ராஜமவுலிதான் நெக்ஸ்ட் என்கிறார்கள் அடுத்த நாளே, ரஜினி சார் பி.வாசுகிட்ட கதை கேட்டுட்டாரே...? என்கிறார்கள் முன்பு சொன்னதையெல்லாம் யாரோ சொன்னதாக நினைத்துக் கொண்டு. இதுதான் ரஜினி. அவருக்கு தோல்வி வந்திருக்கலாம். இருந்தாலும், யானை தும்மினாலும் அது ஏழுருக்கு சாரல்டா...!




-ஆர் எஸ் அந்தணன்

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

Thursday, 22 January 2015

இது ரஜினி சார்- உரசாதீங்க!!!




 இது ரஜினி சார்- உரசாதீங்க!!!

குறிப்பு: இது சமூகவலைத்தளங்களில் உலவும் பல்வேறு மனிதர்களைப் பற்றிய ஒரு பொதுவான பதிவு. எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல (அப்டின்னு தான் சொல்லுவேன். நீங்களா தான் புரிஞ்சிக்கனும்) தமிழ்நாட்டுல முன்னால சினிமா துறையோட பிஸினஸ விரிவாக்கவும், பல மடங்கு பெருக்கவும் ரஜினிங்குற ஒருத்தர் தேவைப்பட்டாரு. ஆனா இப்போ சினிமா மட்டும் இல்லாம சினிமா சார்ந்த அத்தனை துறையோட பிஸினஸ பெருக்கவும், அத மக்கள்கிட்ட கொண்டு போகவும் ரஜினி மட்டுமே தேவைப்படுறாரு. சின்ன உதாரணம் கடந்த ரெண்டு வாரத்துல தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆன அத்தனை வாரஇதழ்களோட அட்டைப்படங்களையும் டைட்டிலையும் பாத்தாலே போதும். எல்லாத்துலயும் ரஜினி, ரஜினி ரஜினி மட்டும் தான். அடுத்த சூப்பர்ஸ்டார தேடுன குரூப்பு கூட இதுல விதிவிலக்கு இல்லை.
அதுமட்டும் இல்லை. ஒருத்தனுக்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டாலோ இல்லை நாலு பேரு அவன உத்து கவனிக்கனும்னு ஆசைப்பட்டாலோ அதுக்கும் ரஜினி ஒருத்தர்தான் தேவைப்படுறாரு. அரசியல்வாதிகள்தான் இந்த அல்ப ட்ரிக்க யூஸ் பண்றாய்ங்கன்னா, சமூக வலைத்தளங்கள்ல சில அல்பங்களும் இதே ட்ரிக்கதான் யூஸ் பண்ணிட்டு இருக்குங்க. அதாவது அவிங்கதான் பகுத்தறிவு பகலவன்கள் மாதிரியும் மத்த அனைவருக்கும் அடிப்படை அறிவுங்குற ஒண்ணே இல்லாத மாதிரியும் அதுங்களே நினைச்சிக்கிறது தான் இதுல ஹைலைட்.
முதல்ல லொல்லு சபா மனோகர் மாதிரி ஒருத்தரு. ஆனா லொல்லு சபா மனோகர விட அதிகம் காமெடி பண்ணக்கூடியவரு. இப்ப இவரு என்ன சொல்றாருன்னா ”ரஜினி தவிர்க்கப்படவேண்டியவர்”ன்னு ஒரு ரெண்டு பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதிருக்காப்டி. அதுமட்டும் இல்லாம கடந்த ரெண்டு நாள்ல அவரு போட்ட போஸ்ட் எல்லாம் பாத்தா எல்லாமே ரஜினியை வசை பாடி போட்டது தான்.
ஏண்டா பாடிசோடா.. மண்டைய மறைச்சாலும் மண்டை மேல இருக்க கொண்டைய உன்னால மறைக்க முடியுதா? ரஜினி தவிர்க்கப்பட வேண்டியவர்னு சொல்லிட்டு, ரஜினியப் பத்தி ரெண்டு பக்கத்துக்கு உக்காந்து போஸ்ட் எழுதிருக்கியே, இதான் நீ ரஜினிய தவிர்க்குற லட்சனம். ரஜினிய புடிக்காத மாதிரி காட்டிக்கிற உன்னாலயே அவர தவிர்க்கமுடியலையே.. அவரப்புடிச்ச மத்தவங்க எப்புடிடா தவிர்ப்பாங்க.
அதுமட்டும் இல்லை. மோடி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிச்சா இவனுங்க பதட்டமாயிடுறாய்ங்க. அதப் பாத்த அடுத்த செகண்டு “ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒண்ணும் பன்னமுடியாது.. ரஜினிக்கு அரசியல் வாய்ஸ் இல்லவே இல்லை” ன்னு பதட்டத்துல ஸ்டேட்டஸ அள்ளித் தெளிக்கிறாய்ங்க. சரி ரஜினி அரசியலுக்கு வந்தாதான் ஒண்ணும் நடக்காதே.. அப்புறம் ஏன் உங்களுக்கு கால் உதறுது? ரஜினிக்கு மோடி வாழ்த்து சொன்னா என்ன ஒபாமா வாழ்த்து சொன்னா என்ன? செல்வாக்கு இல்லாத ஆளப்பத்து உங்களுக்கு ஏன்யா வாய் கொழருது?
அப்புறம் இன்னொரு யக்கா இருக்காங்க. நிறைய படிச்சவங்க. பகுத்தறிவுல இவங்கள அடிச்சிக்க ஆள் கிடையாது. அதாவது இவங்களோட பகுத்தறிவுல இவங்க கண்டுபுடிச்ச விஷயம் என்னன்னா ‘சின்னக் குழந்தையா இருக்கும் போது ரஜினிய புடிச்சா தப்பு இல்லையாம். ஆனா படிச்சப்புறம் ரஜினிய புடிக்கக் கூடாதாம். கமலத்தான் புடிக்கனுமாம். அதுதான் யக்காவோட பகுத்தறிவுக் கொள்கை.
அதாவது இது எப்டிக்கீதுன்னா நா சின்ன வயசுல எங்க அப்பாவ அப்பான்னு கூப்புடுவேன். ஆனா படிச்சப்புறம் இவரு எங்க அப்பா மாதிரி தெரியலையே.. பக்கத்து வீட்டுக்காரர பாத்தாதான் எங்க அப்பா மாதிரி தெரியிறாரு. எத்தனை வருசத்துக்கு தான் ஒருத்தரையே அப்பான்னு கூப்டுறது. இனிமே பக்கத்து வீட்டுல இருக்கவரையே அப்பான்னு கூப்புடுவோம்னு முடிவு பண்ற மாதிரி இருக்கும்.
அதுமட்டும் இல்லை. யக்காவுக்கு வடிவேலு ஃபோட்டோவ விட ரஜினி ஃபோட்டோவ பாத்த ரொம்ப ரொம்ப சிரிப்பு வருதாம். யக்காவ பாருங்கைய்யா.. என்னா அழகு.. இந்தப்பக்கம் பாத்தா ஐஸ்வர்யா ராய மடிச்சி வச்சா மாதிரி இருக்காங்க. அந்தப் பக்கம் பாத்தா காத்ரீனா கைஃப வடிச்சி வச்சா மாதிரி இருக்காங்க. கவுண்டர் சொல்றா மாதிரி.. “என்னா மூஞ்சி… உலகத்து அழகுகளையெல்லாம் ஒட்டுமொத்தமா சேத்து வச்சா மாதிரி இருக்கு இந்த மூஞ்சி.. காலங்காத்தால வேலைக்கு போறவன் இந்த மூஞ்ச பாத்துட்டு போனா போதும்… ஸ்பாட் அவுட்” . அப்படிப்பட்ட யக்காவுக்கும் ரஜினியை பாத்த சிரிப்பு வராம என்ன செய்யும். யக்காவுக்கு திடீர்னு பப்ளிசிட்டி வேணும்னா உடனே ஒரு ஜாதிப்போஸ்ட போட்டு தேடிப்பாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு.
இதுல அல்டிமேட் காமெடி என்னன்னா இவய்ங்களுக்கு ரஜினியை புடிக்காததுக்கு ஒரு காரணம் சொல்லுவாய்ங்க பாருங்க. பகுத்தறிவு வாதிகள்னா இவய்ங்கதான். அதாவது ரஜினி இந்த ஊர்ல சம்பாதிச்சி வெளியூர்ல சொத்து வாங்குறாராம். ரஜினி இந்த ஊருக்கு எதுமே செய்யலையாம்.
இல்லை நா தெரியாமத்தான் கேக்குறேன். ரஜினி நம்மூர்ல சொத்து வாங்குறதால வர்ற வரிப்பணம் கிடைக்காததுனால தான் தமிழ்நாடு இன்னும் பின் தங்கியிருக்கு. இல்லைன்னா அகில உலக லெவல்ல நம்பர் ஆயிருக்கும் அப்டித்தானே ராஜாக்களா? ஏண்டா நொன்னைகளா Swizz Bank ல பத்தாயிரம் கோடி இருபதாயிரம் கோடின்னு கருப்பு பணம் வச்சிருக்கவன்கிட்டல்லாம் இத கேக்க துப்பில்லை. வந்துட்டாய்ங்க ரஜினி கால்ல விழுகுறதுக்கு.
சரி ரஜினி ஏன்யா தமிழ்நாட்டுல சொத்து வாங்கனும்? அவரு சம்பாதிச்ச காசுல எங்க வேணா சொத்து வாங்குவாறு அதுல உனக்கென்ன எரியிது? நா தெரியாமத்தான கேக்குறேன் இப்போ துபாய்ல சம்பாதிக்கிற காசுல துபாயில மட்டும் தான் செலவு பண்ணனும், இந்தியாவுக்கு யாரும் எடுத்துட்டு போகக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டாய்ங்கன்னா இன்னிக்கு தமிழ்நாட்டுல கால்வாசி பேருவீட்டுல அடுப்பெரியாது. இவனுங்க மட்டும் துபாய், சிங்கப்பூர்ன்னு போய் சம்பாதிச்சி இங்க அள்ளிட்டு வருவாய்ங்களாம் யாரும் கேக்கக்கூடாதாம். ஆனா ஒருத்தர் கர்நாடகாவுல சொத்து வாங்குனா எதோ பெரிய குத்தமாம்.
ஒரு குடும்பம் தமிழ்ல 8 சேனல், தமிழ் இல்லாம ஆந்த்ரா கன்னடா கேரளாவுல ஒரு 22 சேனல்னு மொத்தம் 30 சேனல் வச்சி எவ்வளவோ சம்பாதிக்கிறாங்க. அவருக்கு எங்கெங்க சொத்து இருக்குன்னு எவனாவது கேட்டீங்களா? இல்லை அவரு தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சிருக்காருன்னு கேட்டீங்களா? ரஜினி நாலு வருஷத்துக்கு ஒரு தடவ படம் நடிக்கிறாரு. அத ஒரே ஒரு தடவ நீ 100 ரூவா குடுத்து தியேட்டர்ல பாக்குற. இந்த மாதிரி வக்கனையா பேசுற நாயிங்க டிவிடி வாங்கி திருட்டுத் தனமாதான் பாக்குதுங்க. அதுக்கே அவர என்ன செஞ்ச என்ன செஞ்சன்னு இத்தனை கேள்வி கேக்குறியே, ஒவ்வொரு மாசமும் 200 ரூவா குடுத்து, அவன் சேனல பாத்து, அவன் போடுற add எல்லாம் பாத்து அவனுக்கு எவ்வளவோ லாபத்த குடுத்துருக்கீங்களே அவர்கிட்ட எவனாவது கேட்டுருக்கீங்களாய்யா?
ரஜினி தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யலையாம். ங்கொய்யால எதுக்குடா செய்யனும். நீ என்ன செஞ்சிட்ட அவருக்கு இல்லை நீ என்ன செஞ்சிட்ட இந்த ஊருக்கு? ஒரு சின்ன உதாரணம். நாலு வருஷம் முன்னால ஒரு வெள்ள நிவாரண நிதி எல்லார்கிட்டயும் திரட்டுனாங்க. அப்போ தமிழ்நாட்டுல நாலைஞ்சி தடவ முதல்வரா இருந்த ஒருத்தர், அதுக்கு ஒரு அமவுண்டு குடுக்குறாரு. எப்புடின்னு கேளுங்க. அதாவது அவரு ஒளியின் ஓசை என்கிற ஒலகப்படத்துக்கு கதை வசனம் எழுதியதால கிடைச்ச 5 லட்ச ரூபா சம்பளத்த நிவாரணத்துக்காக குடுக்குறாரு. அவரோட சொத்துக்கணக்குக்கு எத்தனை சைஃபர் போடுறதுன்னே இன்னும் தெரியாம முழிச்சிட்டு இருக்காய்ங்க. அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச அந்த ஒலகப்பட சம்பளத்த மட்டும் நிவாரணத்துக்கு குடுக்குறாரு. ஏன் அங்க போய் நாலு கேள்விய கேக்க வேண்டியது?
அப்புறம் இன்னொரு கிருக்கன். 64 வயதில் 20 வயது பெண்களுடன் டூயட் பாடுறாருன்னு ஒரு குறை சொல்றான். சரிங்க மிஸ்டர் மெண்டல், நீங்க சொல்ற மாதிரியே 20 வயசு பொண்ணுங்க வேணாம். அந்த காலத்துல அவரோட நடிச்ச ஸ்ரீபிரியா, அம்பிகாவையே இப்பவும் ஹீரோயினா போட்டு எடுப்போம். நீ பாக்குறியா படத்த?
அப்புறம் சமீபத்துல ”ச்சீ மான்” ன்னு இன்னொரு கிருக்கன் ஒரு அல்டிமேட் காமெடி பண்ணாப்டி. அதாவது “ரஜினி அரசியலுக்கு வந்தால் நாங்கள் மோதிப்பார்க்கத் தயார்”ன்னு ஒரு அறிக்கை. அதாவது சார் எப்டின்னா, காஷ்மீர்லருந்து கன்யாகுமரிவரைக்கும் உள்ள அத்தனை அரசியல் வாதிகளையும் மோதி ஜெயிச்சிட்டு ஸபெசல் பர்மிசன்ல ரஜினியோட மோத வந்துருக்காரு. ஏற்கனவே அரசியல்ல இருக்கவய்ங்க கூட மொதல்ல மோது சனியனே. அரசியல்லயே இல்லாத ஒருத்தர அரசியலுக்கு வரவச்சி அதுக்கப்புறம் மோதுறாராம். ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே வக்கில்லையாம்.. ஆனா… சரி விடுங்க அத ஏன் என் வாயால சொல்லிகிட்டு.
சவால் விடுறாராம் சவால். சரி நீயும் ஒரு டைரக்டர் தானே.. ‘நா ஒரு படம் டைரக்ட் பண்ணி ரிலீஸ் பண்றேன். ரஜினி ஒரு படம் நடிச்சி ரிலீஸ் பண்ணட்டும் மோதிப்பாக்கலாம்”ன்னு நீ ஒரு சவால் விட்டியன்னா ஆம்பளடா. ஒரு முதலை தரையில இருக்கும்போது அதுக்கு முன்னால போய் நின்னு டான்ஸ் ஆடிட்டு பெரிய இவன் மாதிரி பீத்துறது பெரிய விஷயம் இல்லை. தில் இருந்தா அதே டான்ஸ அந்த முதலை தண்ணிக்குள்ள இருக்கும்போது போய் பக்கத்துல ஆடிப்பாரு. டங்குவாரு அந்துரும்.
Source:oru rajini rasigarin nyayamana kelvigal..
Superrr siva bro!!!
www.muthusiva.in

Wednesday, 11 December 2013

ஹாப்பி பர்த்டே தலைவா ...







ரஜினி கொடுத்த இரண்டு லட்சம்



ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ‘படையப்பா’ படத்துக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த படம். எதிர்பார்ப்புக்குப் கேட்க வேண்டுமா?

பல பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்போது ‘குமுதம்’ இதழில் பொறுப்பாசிரியராய் இருந்தேன். குமுதம் சினிமாப் பகுதியின் இன்சார்ஜும் அப்போது நான்தான். குமுதம் சினிமா என்று தனியாக ஒரு இதழ் வெளியிடத் திட்டம் இருந்ததால், ஏழு சினிமா நிருபர்கள். ‘பாபா’ படம் பற்றிய பிரத்யேகத் தகவல்களை அள்ளி அள்ளி கொடுத்தோம்.

நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை எங்கள் நிருபர் ஒருவர் பாபா படத்தில் தொடர்புடைய ஒருவரிடம் ‘ஏதாவது லேட்டஸ்ட் டெவலப்மெண்ட் உண்டா?’ என்று கேட்பதற்காக போன் செய்தபோது, எதிர்முனைக்காரர் அவசரமாக போனை கட் செய்தார். சிறிதுநேரத்தில் அவரே லைனில் வந்தார்.

‘சாரோடு டிஸ்கஷனில் இருந்ததேன். அதான் பேச முடியலை…’ என்றவர், சில தகவல்களைக் கூறினார். அது, பாபா படத்தின் முதல் சண்டைக் காட்சி. அதில் ரஜினி வில்லன்களை நோக்கி நடந்து வருவது போன்று சாதாரணமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த டைரக்டர் ஷங்கர், ரஜினி சாரின் ஷூவிலிருந்து தீப்பொறி பறப்பதுபோல் கிராஃபிக்ஸ் செய்யலாம் என்று ஐடியா கொடுத்திருப்பதாகத் தகவல் கூறினார் அவர். இதுபோல் படத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் அவ்வப்போது லைவாக வந்து கொண்டே இருந்தன. நாங்களும் தொடர்ந்து வெளியிட்டோம். அப்போது ரஜினி நடந்தாலும் செய்தி ; உட்கார்ந்தாலும் செய்தி!

ரஜினிக்கு ‘பாபா சினிமா…. சினிமா…’ பாடல் காட்சியில் தோள்பட்டை நழுவிவிட்டது. ரஜினியை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷ் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு அவரும் விஷ் செய்வதால் அவருக்குக் கை வலிப்பதே காரணம் என்று சின்ன சின்ன தகவல்களைக் கூட, பாபா பக்கங்கள் என்று அதற்கென்று தனியாக பக்கங்களையே ஒதுக்கி வெளியிட்டோம். படத்தைப் பற்றி எந்தத் தகவல் கிடைத்தாலும் அதனை மிஸ் செய்யவே இல்லை.

குமுதம் ஒருபக்கம் என்றால், விகடனும் அசரவில்லை. தன் பங்குக்கு அவர்களும் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். குமுதமும் விகடனும் போட்டி போட்டுக் கொண்டு தகவல்களை வெளியிட்டன. விகடன் பெங்களூருக்கே நிருபர்களை அனுப்பி ரஜினி, மனிஷா கொய்ராலா பைக் சவாரியைப் படம் எடுத்து ஸ்பெஷல் ஸ்டோரியே பண்ணியது. பாபா படம் சரிவரப் போகவில்லை. அதற்குக் காரணம், படத்தின் நம்பகத் தன்மையில்லாத கதைதான் என்றாலும் மீடியாக்கள் கொடுத்த ஓவர் பில்டப்பும் இதற்கு மிக முக்கியமான காரணம்.

‘பாபா’ படம் பூஜை போடப்பட்டபோது, ‘குமுதம் ரிப்போர்ட்டரில்’ பாபா பஞ்ச்’ என்கிற போட்டி வைத்தோம். அந்த ஐடியா என்னுடையது. ‘பாபா படத்தில் ரஜினி எந்த மாதிரி பஞ்ச் டயலாக்குகள் பேசுவார்? வாசகர்களே எழுதுங்கள். பஞ்ச்களை ரஜினியே தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புண்டு’ என்று அந்தப் போட்டிக்குச் சிறிய கமர்சியல் கவர்ச்சியும் கொடுத்தோம்.

கிட்டதட்ட 4000 வாசகர்களிடமிருந்து பஞ்ச் டயலாக்குகள் வந்து குவிந்தன. அவற்றில் நான் சுவையான ஐம்பது பஞ்ச்களை மட்டும் தேர்வு செய்தேன். அவற்றை கம்போஸ் செய்து, ‘அன்புள்ள ரஜினி சாருக்கு, இத்துடன் நாங்கள் அறிவித்த ‘பாபா பஞ்ச்’ போட்டிக்கு வாசகர்கள் எழுதியிருந்த பஞ்ச் டயலாக்குகளை இணைத்துள்ளோம். சிறந்தவற்றை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.’ என்று ஒரு கடிதம் தயாரித்துக் கொண்டோம். நானும் நிருபர் இரா. ரவிஷங்கரும் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்று, ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் த. சத்யநாராணாவைச் சந்தித்துக் கடிதத்தையும் பஞ்ச் டயலாக்குகளையும் கொடுத்தோம்.

அவற்றை ரஜினி சாரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கண்டிப்பாகச் சேர்ப்பிப்பதாகக் கூறினார் சத்யநாராயணா. பட டிஸ்கஷன், ஆர்ட்டிஸ்ட் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கும் ரஜினி இதனைக் கண்டுகொள்ளவா போகிறார் என்று எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அதேநேரம் முயற்சி செய்து பார்ப்போமே என்கிற முனைதல் அது.

கடிதம் கொடுத்து இரண்டு நாட்கள் கழிந்தது. நான் அதனை மறந்து என் கேபினில் ஒரு மேட்டரை எடிட் செய்து கொண்டிருந்தபோது, போன் மணி அடித்தது. எதிர்முனையில் ஒரு குரல் (அவர் பெயர் ஆறுமுகம் என்று நினைவு).
‘நாங்க ரஜினி சார் வீட்லேர்ந்து பேசறோம். சார் உங்கக்கிட்டே பேசணுமாம்….’ நான் லைனில் ஆவலுடன் காத்திருந்தபோது, லைன் இணைப்பு கட் ஆனது.

எனக்குப் படபடப்பு எகிறியது. போன் அருகிலேயே தவிப்புடன் காத்திருந்தேன். மீண்டும் தொலைபேசி அழைப்பு. முதல் ரிங் ஒலித்து முடிப்பதற்குள் பாய்ந்து எடுத்து காதுக்குக் கொடுத்தேன். சில விநாடிகள் இடைவெளியில் அந்தக் காந்தக் குரல்.

“நான் ரஜினி பேசுறேன்….” என்று எதிர்முனையில் கேட்ட காந்தக் குரலில் நான் திகைத்து, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, “வணக்கம் அண்ணே…” என்று சொல்லி வைத்தேன். அந்த நிமிடத்தின் சந்தோஷம் சொல்லில் எழுத இயலாதது... அலுவல் பூர்வமான உரையாடல்களில் ‘சார்…’ என்று அழைப்பதுதான் முறையானதாகும். ‘அண்ணே’ என்பது என்னையும் அறியாமல் நாக்கில் வந்து உட்கார்ந்து கொண்ட வார்த்தை.

ரஜினி தன் ஸ்டைலில் படபடவென்று தொடர்ந்தார். “கருணாகரன்…. வாசகர் பஞ்ச் ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு வாசகரும் என் மீதான தங்கள் அன்பை பாசத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைத்துமே சூப்பர்ப். ரசிகர்களுக்கு நன்றி. ஆனால், இந்த பஞ்ச் டயலாக்களை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காதுன்னு நினைக்கிறேன். அது தேவையில்லாத யூகங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

அதனால் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கிட்டே சொல்லிவைக்கிறேன். படத்தின் இயக்குநரான அவர் செலக்ட் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்…” என்றார் ரஜினி.

“உங்கள் பேட்டி வேணும்ணா…” என்றேன்.

“ஹா… ஹா… இப்ப டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கு. படத்தின் வேலையில் பிஸியாக இருக்கேன் கருணாகரன். இன்னொரு முறை பார்க்கலாம்…” என்றார்.

ரஜினி, தான் தேர்வு செய்ய வேண்டாம் என்று நினைத்திலும் ஒரு காரணம் இருக்கவே செய்தது. காரணம் வந்திருந்த பஞ்ச் டயலாக்குகளில் பல அரசியல் தொடர்பானவை. அவற்றை ரஜினி தேர்வு செய்திருந்தால் அவர் இன்னாரை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்கின்ற யூகங்களைக் கிளப்பிவிடும் என்பதால்தான் அந்தச் சூழலை அப்போது அவர் தவிர்த்தார் என்று நினைக்கிறேன்.

ஓட்டல் அருணாசலாவில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைச் சந்தித்தேன். வாசகர்கள் எழுதிய அந்த பஞ்ச் டயலாக்குகளை மிகவும் பாராட்டினார். தொடர்ந்து முயன்றால் அவர்களில் பலர் சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்றார். நான் அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ‘பாட்ஷா’ ‘பாபா’ இரண்டுமே உச்சரிப்பில் ஒரே சாயலில் உள்ளனவே…. இரண்டு படங்களுக்கும் நீங்கள்தான் இயக்குநர். அப்படியென்றால், இந்தப் படத்திலும் ரஜினி சாருக்கு தாதா கேரக்டர் தானா?’ என்றேன்.

“தாதா கேரக்டர்தான். ஆனால், இது வேறு. இதுக்குமேல் அதைப் பற்றிப் பேச முடியாது. படத்தைப் பார்த்து மக்கள் தெரிந்து கொள்ளட்டும்….’ என்று சஸ்பென்ஸ் காட்டினார். பிறகு அவர் தேர்ந்தெடுத்த 21 பஞ்ச் டயலாக்குகளைக் கொடுத்தார்.

ஆபீஸ் வந்து சுரேஷ் கிருஷ்ணாவிடம் பேசியது, வெளியில் கேட்டது என்று பல விஷயங்களைச் சேர்த்து, ‘பாபா…. வெளிவராத ரகசியங்கள்’ என்று குமுதத்தில் கவர்ஸ்டோரி எழுதினோம். பிறகு, சுரேஷ் கிருஷ்ணா தேர்வு செய்த 21 பஞ்ச் டயலாக்களையும் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிட்டோம். அவற்றில் சூப்பர் பஞ்ச் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து, வெளியிட்டோம். அந்த சூப்பர் பஞ்ச், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் வருவேன்...’

டயலாக்குகள் இடம்பெற்ற ரிப்போர்ட்டர் இதழ் வெளிவந்த அன்று மதியம் ஒரு போன். ‘பாபா’ படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் துரை பேசினார். ‘இஷ்யூவில் வெளிவந்திருக்கிற ஒவ்வொரு டயலாக்கும் ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்...’ என்று கூறி நிறுத்தினார்.

‘அதனால்...? சொல்லுங்க சார்....’ என்று ஆர்வம் காட்டினேன்.

‘பாபா’ ஷூட்டிங் நடக்கிற கேம்ப கோலா வளாகத்துக்கு சாயங்காலம் வாங்க.... ஒரு சஸ்பென்ஸ்....’ என்று கூறிவிட்டு, போனைத் துண்டித்தார்.

தாங்க முடியாத ஆர்வத்தோடு, மாலையில் நானும் ரவிஷங்கரும் கேம்பகோலா வளாகத்துக்கு விரைந்தோம். காம்பவுண்டுக்கு வெளியே திருவிழாப்போல் மக்கள் கூட்டம். செக்யூரிட்டிகளின் பலத்த பாதுகாப்பு. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி.

துரை ஏற்கெனவே கூறியிருந்ததால் நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். வளாகத்திற்குள் நுழைந்தது நமது வாகனம். நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிறச் சட்டையுடன் நம்மை வரவேற்றார் துரை.

‘என்ன சார் சஸ்பென்ஸ்?’ என்றேன் ஆவலாக.

‘பஞ்ச் எழுதிய ஒவ்வொரு வாசகருக்கும் ரஜினி சார் சிறப்புப் பரிசாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். இருபத்தொரு வாசகருக்கும் தலா பத்தாயிரம் வீதம் மொத்தம் இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் பரிசு. அதற்கான டிமாண்ட் டிராஃப்ட்கள் இதோ...’ அவரது படக் கம்பெனியான ‘லோட்டஸ் இன்டர் நேஷனல்’ முகவரியிட்ட கவர்களில் டி.டி.களை வைத்து என்னிடம் ஒப்படைத்தார். வாசகர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தேன்.

‘அதுமட்டுமல்ல. ஒவ்வொரு வாசகருக்கும் அவர் தன் லெட்டர் ஹெட்டில் ‘நீங்கள் எழுதிய ‘பாபா பஞ்ச்’ மிக அருமை. அதைப் படத்தில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறேன். தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும் நன்றி’ என்று எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்...’ என்று கூறிய துரை, ரஜினி சார் எழுதிய அந்தக் கடிதங்களையும் என்னிடம் ஒப்படைத்தார்.

‘சார்... இதையெல்லாம் ரஜினி சாரே தன் கைப்பட வாசகர்களுக்கு கொடுத்தால் ஹைலைட்டாக இருக்குமே....’ என்றேன்.

‘அவர் படத்தில் முழு கவனமாக இருக்கிறார். அதனால், அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமே...’ என்றார் பொறுப்புள்ள நிர்வாகத் தயாரிப்பாளராக.

பரிசு பெற்ற ரஜினி ரசிகர்களைச் சந்தித்து அவர்களது பேட்டிகளையும் வெளியிடலாம் என்று நினைத்து, எங்கள் செய்தியாளர்களை மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பியபோது, ஒரு நெகிழ்ச்சியான உண்மை புரிந்தது. டயலாக்குகள் எழுதிய பலரும் அடித்தட்டு மக்கள். நடுத்தர வர்க்கம். ஆட்டோ டிரைவர், சர்வர், நடைபாதை கடை வியாபாரி, மளிகைக்கடைக் கூலி என்று பல்வேறு ரகத்தினர். இவர்கள் பரிசுப் பணத்தைத் தங்கள் வாழ்க்கைத் தேவைக்காகவும் மகனின் உயர் கல்விக்காவும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகச் சொன்னபோது, மிகவும் மனம் மகிழ்ந்தேன். மூன்று டயலாக்குகளை எழுதி முப்பதாயிரம் பரிசு பெற்ற நடைபாதைக் கடை வியாபாரியான பெரம்பூர் வாசகர் அப்துல் ரஹ்மான் அந்தப் பணத்தை முழுவதுமாக தனது பிசினஸில் இறக்கித் தனது பிசினஸை விரிவுபடுத்தினார். அவரைச் சந்தித்தபோது, அவரும் அவரது மனைவியும் கண் கலங்கினர்.

பட ஷூட்டிங் முடிந்தபிறகு வைத்த பிரஸ் மீட்டில் ரஜினி, ‘பாபா பஞ்ச்’ போட்டியைப் பற்றி குறிப்பிட்டதுடன் அவற்றில் சில டயலாக்குளைப் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
படத்தில் பயன்படுத்தப்பட்ட சில டயலாக்கள்

1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்

2. பாம் போட்டால்தான் வெடிக்கும். இந்த பாபா சொன்னாலே வெடிக்கும்

3. நான் ஒதுங்கினா ஒன்பது அர்த்தம் இருக்கும்.
இறங்கினா எண்பது அர்த்தம் இருக்கும்

4. நாம நினைச்சதெல்லாம் நடக்காது.
நல்லதை நினைச்சால் நடக்காம இருக்காது.

5. நான் வரவேண்டிய நேரம் வந்துடுச்சி.
நீ போக வேண்டிய நேரம் நெருங்கிடுச்சி

6. இந்த பாபாவுக்கு கால்ல விழறவனையும் பிடிக்காது.
காலை வார்றவனையும் பிடிக்காது.

7. பாபாவுக்கு சீட்டு கொடுக்கவும் தெரியும்.
சீட்டைக் கிழிக்கவும் தெரியும்

8. நான் எந்தப் பக்கமும் சாயாத பாபா

9. நான் நினைச்சா சொன்ன மாதிரி.
சொல்லிட்டா முடிஞ்ச மாதிரி

‘பாபா’ படம் என்றென்றும் நினைவுப் பெட்டகத்தில், நிறைந்து கிடக்கும் வைரப் பொக்கிஷம்!

Thanks : Kumutham Reporter Aarumugam...

Friday, 22 November 2013

டிசம்பர் 1 - தலைவர் ரசிகர்களின் சார்பில் ரத்ததான முகாம் ...






வரும் டிசம்பர் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை ) நமது தலைவர் ரசிகர்களின் சார்பாக சென்னை மதுரவாயல் ஆண்டாள் கல்யாண மஹாலில் ரத்ததான முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது .. விருப்பம் உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும் .. மேலும் விபரங்களுக்கு கீழ் காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும் ... நன்றி .
.. 

முரளி : 8056235381 
உதய் : 9750432144

Monday, 18 November 2013

சந்திரமுகி அனுபவம் நினைவிருக்கிறதா கண்ணுங்களா!! - கோச்சடையான்




சூப்பர் ஸ்டாரின் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அறிவிப்பு வந்ததும், நியாயமாக மற்ற பட ஹீரோக்கள் அல்லது தயாரிப்பாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

பொதுவாக ரஜினி படம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வெளியாகிறது. இந்த இடைவெளியில் அத்தனை விசேஷ தினங்களிலும் இந்த அஜீத் - விஜய் உள்ளிட்டவர்களின் படங்கள் வெளியாகவே செய்கின்றன.

இப்போது பொங்கலுக்கு ரஜினி படம் வருகி்றதென்றால்... நியாயமாக இவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டியதல்லவா முறை.. ஆனால் அல்பைகள், கோச்சடையானுடன் போட்டி போடுகிறார்களாம்... ரஜினி பெயரை தங்கள் விளம்பரத்துக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டே, அவருக்கு குழி தோண்டும் குள்ள நரிகள் இவர்கள்...

போடா... ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்...

சந்திரமுகி அனுபவம் நினைவிருக்கிறதா கண்ணுங்களா!!